தனி ஒருவன் 2-ஆம் பாகம் எப்போது? ஜெயம் ரவி தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
2015 ஆம் ஆண்டின் சூப்பர் ஹிட் வெற்றி படங்களில் ஒன்று ஜெயம் சகோதரர்களின் 'தனி ஒருவன்' என்று கூறினால் அது மிகையாது. ஜெயம் ரவி, ஜெயம் ராஜா, நயன்தாரா, அரவிந்தசாமி, ஹிப் ஹாப் தமிழா ஆதி, தம்பி ராமையா என அனைவருக்குமே இந்த படம் ஒரு பிரேக் கொடுத்தது. இந்த படத்தின் தெலுங்கு மற்றும் இந்தி ரீமேக்குகள் விரைவில் ஆரம்பமாகவுள்ளன. தெலுங்கு ரீமேக்கில் ராம்சரண் தேஜா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த 'தனி ஒருவன்' படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளிவரும் என ஜெயம் ரவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஜெயம் ரவி, "தனிஒருவன் 2-வது பாகத்துக்கான கதைக் கருவை அண்ணன் ராஜா தயார் செய்து விட்டார். என்னிடம் இந்த கதையை கூறிய போது ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது. நம்ம இந்தப் படத்தை பண்றோம் என்று கூறினார்.
எப்போது வேண்டுமானாலும் என்னை கூப்பிடு, நான் வந்துவிடுகிறேன். கதை விவாதத்தின் போது கூட கூப்பிட்டு என்று தெரிவித்திருக்கிறேன். ஏனென்றால் எங்க அண்ணன் படத்தில் ஓர் உதவி இயக்குநராகவும் இருக்க ஆசைப்படுகிறேன். இதுவரைக்கும் சொல்லாத ஒரு விஷயம்,நினைத்துப் பார்க்கவே முடியாத ஒரு விஷயம், தேவைப்படுற ஒரு விஷயம் தனி ஒருவன் இரண்டாம் பாகத்தில் உள்ளது' என்று அவர் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout