'ஜெயம் ரவி 32' படத்தின் மாஸ் அறிவிப்பு.. ரசிகர்கள் குஷி..!

  • IndiaGlitz, [Tuesday,July 04 2023]

ஜெயம் ரவி நடிக்கும் 32 வது திரைப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், இந்த படத்தின் அதிகார அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சற்றுமுன் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதோடு நாளை இந்த படத்தின் டைட்டில் லுக் வெளியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளது

ஜெயம் ரவியின் 32 வது படமாக உருவாக இருக்கும் இந்த படத்தை மிஷ்கினிடம் உதவி இயக்குனராக இருந்த புவனேஷ் இயக்க இருப்பதாகவும் இசைப்புயல் ஏஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் பாலிவுட் நடிகை ஒருவர் என மொத்தம் மூன்று நாயகிகள் இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.