ஜெயம் ரவியின் 29வது படம்.. மாஸ் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகின் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி நடிப்பில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் ஜெயம் ரவியின் 29 ஆவது படத்தின் படப்பிடிப்பு கடந்து சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பதும் இந்த படத்தை அகமது என்பவர் இயக்கி வந்தார் என்பதையும் பார்த்தோம். ’என்றென்றும் காதல்’ ’மனிதன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அகமது இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் நாயகியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த வருகிறார்.
’இறைவன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படம் யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் ஜெயம் ரவியின் அட்டகாசமான லுக்கில் இருப்பதை பார்க்கும்போது, இதுவரை இல்லாத வகையில் வித்தியாசமான கதையம்சத்துடன் உருவாக்கப்பட்ட படம்
ஹரி வேதாந்த் ஒளிப்பதிவில் மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை ஃபேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.
Happyyyy to share the first look poster of dear @actor_jayamravi #Iraivan
— Karthi (@Karthi_Offl) January 15, 2023
Wishing the team all success!!#Nayanthara @Ahmed_filmmaker @thisisysr @Sudhans2017 pic.twitter.com/OTB4w5KMeT
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments