ஜெயம் ரவியின் அடுத்த படத்தின் டைட்டில் இதுவா? 

  • IndiaGlitz, [Wednesday,February 09 2022]

ஜெயம் ரவி நடித்த ’பூமி’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியான நிலையில் தற்போது அவர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ என்ற திரைப்படத்தில் நடித்துக் முடித்துள்ளார். இந்தநிலையில் ஜெயம்ரவியின் 28வது படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

ஜெயம் ரவியின் 28வது படத்தில் அவருக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்க இருக்கும் நிலையில் இந்த படத்தை கல்யாண கிருஷ்ணன் என்பவர் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே ஜெயம்ரவி நடித்த ’பூலோகம்’ திரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்திற்கு ’அகிலன்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் ஜெயம்ரவி ஒரு கேங்ஸ்டராக நடிக்கிறார் என்பதும் இந்த படத்திற்கு மறைந்த இயக்குநர் எஸ்பி ஜனநாதன் திரைக்கதை எழுதி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த முழுவிபரங்களை விரைவில் படக்குழுவினர் வெளியிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

More News

ஒரே நேரத்தில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணிபுரியும் பிரபல இயக்குனர்!

தமிழ் சினிமாவின் இசை மேதைகளான இசைஞானி இளையராஜா மற்றும் இசைப்புயல் ஏஆர் ரகுமான் ஆகிய இரண்டு இசையமைப்பாளர்களுடன் பிரபல இயக்குனர் ஒருவர்

தமிழ் சினிமாவில் கிரிக்கெட் பிரபலம் ஸ்ரீசாந்த்… அதுவும் முக்கியப் திரைப்படத்திலா?

“நானும் ரௌடிதான்“ திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் சேதுபதி

லதா மங்கேஷ்கரின் கோடிக்கணக்கான சொத்துக்கு யார் வாரிசு? வெளியான புதுத் தகவல்!

இசைக்குயில் லதா மங்கேஷ்கரை அவருடைய மென்மையான குரலுக்காக மட்டுமல்ல, எளிமை மற்றும் கனிவான குணத்திற்காகவும்

என்னது 85 கோடி அபராதமா? தனி ஆளாய்ப் போராடும் விமானி!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் விமான நிலையத்தில் பணியாற்றிய விமானி ஒருவருக்கு அம்மாநில அரசு 85 கோடி ரூபாய்

360 கோடி ரூபாய் கப்பல் வாங்கிய அமேசான் நிறுவனர்… இதற்காகப் பாலத்தையே இடிக்கும் அரசு!

அமேசான் நிறுவனத்தின் செயல்தலைவர் ஜெஃப் பெசோஸ் சமீபகாலமாக வெவ்வேறு தொழில் முதலீடுகளில் கவனம் செலுத்திவருகிறார்.