'ஜெயம்', 'அந்நியன்' சதாவா இவர்? லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Sunday,April 23 2023]

’ஜெயம்’ திரைப்படத்தில் அறிமுகம் ஆகி அதன் பின்னர் ஷங்கர் இயக்கத்தில் உருவான ’அந்நியன்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை சதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

‘ஜெயம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் நடிகை சதா. அதன் பிறகு அவர் ’வர்ணஜாலம்’ ’அந்நியன்’ ’திருப்பதி’ உள்பட ஒரு சில தமிழ் திரைப்படங்களில் நடித்தார். மேலும் இவர் தெலுங்கு கன்னடம் மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு ’டார்ச் லைட்’ என்ற திரைப்படத்தில் நடித்ததை அடுத்து அதன் பிறகு அவர் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திரைப்படங்களில் மட்டும் இன்றி ஒரு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவர் நடுவராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை சதா இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர். நடிகை சதா ஒரு வனவிலங்கு ஆர்வலர் என்பதால் அடிக்கடி காடுகளுக்கு சென்று வனவிலங்குகளை புகைப்படம் எடுப்பதை பொழுதுபோக்காக கொண்டுள்ளார். அது கொடுத்த புகைப்படங்கள் வீடியோக்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை சதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் ’அந்நியன்’ படத்தில் பார்த்தது போலவே இப்போதும் இருக்கிறார் என ரசிகர்கள் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.