ஜெயலலிதா மருத்துவமனையில் பேசிய ஆடியோ வெளியீடு
- IndiaGlitz, [Saturday,May 26 2018]
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு மர்மமான முறையில் இறந்ததால் அவருடை மரணம் குறித்து தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்ட ஆறுமுகச்சாமி தலைமையிலான கமிஷன் விசாரணை செய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் .27ஆம் தேதி ஜெயலலிதா பேசிய 52 விநாடிகள் கொண்ட ஆடியோ பதிவு வெளியாகியுள்ளது.
ஜெயலலிதா மருத்துவமனையில் பேசிய இந்த ஆடியோ பதிவை மருத்துவர் சிவக்குமார் விசாரணை ஆணையத்தில் தாக்கல். இந்த ஆடியோவில்மூச்சுத்திணறலை உணர்ந்தது எப்படி என ஜெயலலிதா பேசிய விவரம் பதிவாகியுள்ளது.
அதேபோல் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி ஜெயலலிதா தனது கைப்பட எழுதிய உணவுப் பட்டியல் ஒன்றும் வெளியாகியுள்ளது. தனக்கு என்ன உணவு தேவை என்பது குறித்து ஜெயலலிதா கைப்பட எழுதியுள்ளார். காலையில் இட்லி, 4 ரொட்டி துண்டுகள், காபி, இளநீர், ஆப்பிள், பிஸ்கட் சாப்பிடுவதாக எழுதியுள்ளார். மேலும் மதிய உணவாக சாதம், தயிர், முலாம்பழம், சாப்பிடுவதாக ஜெயலலிதா எழுதியுள்ளார். இந்த பட்டியலையும் டாக்டர் சிவகுமார் விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்தார்.