கொடநாடு கொலை வழக்கில் திடீர் திருப்பம். தேடப்பட்ட ஜெ.வின் கார் டிரைவர் மர்ம மரணம்
Send us your feedback to audioarticles@vaarta.com
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் சமீபத்தில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கை ஐந்து தனிப்படைகள் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். விசாரணையில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.
போலிசார் தன்னை நெருங்கியதை அறிந்து கொண்ட கனகராஜ், சரண் அடைய முடிவு செய்து, நேற்று இரவு தனது நண்பர் ஒருவரிடம் மோட்டார் சைக்கிளை வாங்கிக்கொண்டு சேலம் மாவட்டம் ஆத்தூர் போலீசாரிடம் சரண் அடைய சென்றார். ஆனால் எதிர்பாராத வகையில் அவரது மோட்டா சைக்கிள் அந்த வழியாக வேகமாக வந்த சொகுசுகார் ஒன்றின் மீது மோதியதால் கனகராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார்.
கனகராஜை காவல்துறையினர் தேடிவந்த நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து எதிர்பாராத விபத்தா? அல்லது கனகராஜ் சரண் அடைவதை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் ஏற்படுத்திய விபத்தா? என்ற கோணத்தில் போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout