ஜெயலலிதா தோழி சசிகலாவுக்கும் உடல்நலக்குறைவா?

  • IndiaGlitz, [Saturday,November 26 2016]

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு லண்டன் டாக்டர், டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள், சிங்கப்பூர் டாக்டர்கள் ஆகியோர் அப்பல்லோ டாக்டர்களுடன் இணைந்து சிகிச்சை அளித்தனர். தற்போது அவர் கிட்டத்தட்ட பூரண நலம் அடைந்துவிட்டதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் ஜெயலலிதா மருத்துவமனையில் அட்மிட் ஆன நாள் முதல் அவரை கவனித்து வந்த அவரது தோழி சசிகலாவுக்கும் சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 23ஆம் தேதி சசிகலா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து கொண்டாராம்.
இந்த தகவல் அதிமுக தொண்டர்கள் மற்றும் அமைச்சர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் வெகுவிரைவில் வீடுதிரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


More News

புதிய ரூபாய் நோட்டாக வரதட்சணை கொடுக்காததால் நின்று போன திருமணம்

ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால் பலவித குழப்பங்கள் நாள்தோறும் நாடு முழுவதும் நடைபெற்று வருவதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்

638 முறை கொலை முயற்சியில் இருந்து தப்பிய பிடல் காஸ்ட்ரோ

கியூபா நாட்டின் முன்னாள் அதிபரும், கியூபா மக்களின் அன்புக்குரியவரும், சேகுவாராவின் உயிர் தோழருமான பிடல் காஸ்ட்ரோ இன்று காலமானார்.

கே.பாக்யராஜூக்கு பார்த்திபன் நடத்தும் 'திரைபாக்கியம்' விழா

கே.பாக்யராஜின் உதவியாளராக இருந்த பார்த்திபன் தற்போது 'கோடிட்ட இடங்களை நிரப்புக' என்ற படத்தை இயக்கியுள்ளார்.

முன்னாள் கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோ காலமானார்

கியூபா நாட்டின் முன்னாள் அதிபரும், கம்யூனிஸ்ட் புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோ இன்று காலமானார். அவருக்கு வயது 90

டண்டனக்காவை அடுத்து 'டமாலு டுமீலு'. அனிருத்தின் அடுத்த பாடல்

இளம் இசைப்புயல் அனிருத், இசையமைப்பது மட்டுமின்றி மற்ற இசையமைப்ப&