ஜெயலலிதா என்னை ஜனாதிபதி ஆக்க விரும்பினார். பிரபல பாஜக பிரமுகர்

  • IndiaGlitz, [Thursday,December 08 2016]

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பல ஆண்டுகள் நண்பராகவும், சில ஆண்டுகள் எதிரியாகவும் இருந்த பாஜக பிரமுகர் சுப்பிரமணியன் சுவாமி ஜெயலலிதாவுடனான தனது நட்பு குறித்து ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

ஜெயலலிதாவை தனக்கு 34 வருடங்களாக தெரியும், அவர் 1982இல் அரசியலில் நுழையும்போதே தனக்கு அவர் அறிமுகம் என்றும் கூறினார்.

நாங்கள் இருவரும் ஒன்றாக மாநிங்களவையில் பணிபுரிந்ததாக கூறிய சுப்பிரமணியம் சுவாமி, 1998ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலின்போது வாஜ்பாய் தலைமையிலான பாஜகவுடன் கூட்டணி வைக்க தான் உதவியதாகவும் தெரிவித்தார்.

மேலும் கடந்த 2007ஆம் ஆண்டு நடந்த குடியரசு தலைவர் தேர்தலில் தன்னை போட்டியிடுமாரு ஜெயலலிதா கேட்டு கொண்டதாகவும், ஆனால் தனக்கு ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்டிருந்த ஒப்பந்தம் காரணமாக மறுத்துவிட்டதாகவும் கூறினார். மேலும் அந்த தேர்தலில் தனக்கு வெற்றி பெறும் வாய்ப்பு இல்லை என்று கருதியதால் தான் குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட மறுத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.