ஜெ.தீபா கணவரின் புதிய கட்சியின் பெயர் அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
எம்.ஜி.ஆர் அவர்களால் தொடங்கப்பட்டு ஜெயலலிதாவால் கட்டுக்கோப்பாக காப்பாற்றப்பட்ட அதிமுக தற்போது மூன்று அணிகளாக உள்ள நிலையில் அதிமுகவின் அடுத்த தலைவராக வருவார் என்று கடந்த சில மாதங்களுக்கு முன் எதிர்பார்க்கப்பட்ட ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் புதிய கட்சியை தொடங்கினார். 'எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை' என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த கட்சியில் திடீர் பிளவு ஏற்பட்டு தீபாவின் கணவர் மாதவன் தனியாக கட்சி ஆரம்பிக்கவுள்ளதாக கூறினார்.
இந்நிலையில் இன்று ஜெயலலிதா சமாதியில் தீபாவின் கணவர் மாதவன் தனது புதிய கட்சியின் பெயரை அறிவித்தார். இந்த கட்சிக்கு 'எம்ஜிஆர் ஜெஜெ திராவிட முன்னேற்ற கழகம்' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த கட்சியின் நிர்வாகிகள் மற்றும் கொடியை அவர் விரைவில் அறிவிக்கவுள்ளார். கட்சியின் பெயரை அறிவித்த பின்னர் தொண்டர்கள்(!) மத்தியில் பேசிய மாதவன், 'தான் சுயநலமில்லாத தலைவர் என்றும், தமிழக மக்கள் தனது பின்னால் இருப்பதாகவும், அதிமுக நிர்வாகிகள் பலர் தன்னுடைய கட்சியில் இணைவார்கள் என்றும் அவர் கூறினார்.
தீபா ஆரம்பித்த கட்சியே தமிழக அரசியல் சுனாமியில் சிக்கி சின்னாபின்னாமாகி வரும் நிலையில் மாதவனின் கட்சி எந்த அளவுக்கு தாக்கு பிடிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com