புதுப்பொலிவுடன் ஜெயலலிதா நினைவகம் தயாராவது எப்போது?

  • IndiaGlitz, [Saturday,December 10 2016]

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த இடத்தில் பிரமாண்டமான நினைவகம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஜெயலலிதா நினைவகத்தின் டிசைன் தயாராகி வருவதாகவும், டிசைன் உறுதி செய்யப்பட்டவுடன் நினைவகம் அமைக்கும் பணிகள் தொடங்கும் என்றும் தமிழக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் புதுப்பொலிவுடன் கூடிய அம்மா நினைவகம் வரும் பிப்ரவரி 24ஆம் தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாளில் திறக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் குழு ஒன்று நேற்று ஜெயலலிதா நினைவகத்தை பார்வையிட்டு, அஞ்சலி செலுத்த வரும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு மற்றும் வசதிகள் ஏற்படுத்துவது குறித்து ஆலோசனை செய்தனர்.

More News

வெங்கட்பிரபுவின் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து கூறிய பிரமாண்ட இயக்குனர்

வெங்கட்பிரபு இயக்கிய முதல் திரைப்படமான 'சென்னை 600028' படத்தின் இரண்டாம் பாகம் 'சென்னை 600028 II' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி ஊடகங்கள் மற்றும் ரசிகர்களின் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுள்ளது

தோழி என்றாலே சர்ச்சைதானோ? தென்கொரிய அதிபருக்கு நேர்ந்த பரிதாப நிலை

தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது தோழியால் பல சர்ச்சைகளுக்கு உள்ளாகியதாக கூறப்படும் நிலையில் தென்கொரிய பெண் அதிபர் பார்க் ஜியன் ஹை...

சமுத்திரக்கனியின் 'தொண்டன்' தொடங்குவது எப்போது?

பிரபல இயக்குனர் சமுத்திரக்கனி நடித்து, தயாரித்து, இயக்கிய 'அப்பா' திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக அவர் 'தொண்டன்' ...

அமீர்கானுக்கு டப்பிங் குரல் கொடுப்பாரா ரஜினிகாந்த்?

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் நடித்துள்ள 'டங்கல்' திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள...

ஜெயலலிதாவுக்கு கோவில் கட்டும் கின்னஸ் சாதனை காவலர்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் சொகுசு வாழ்க்கை அனுபவித்த பலர் அவரை அடுத்த நாளே மறந்துவிட்ட நிலையில் அவரால் எந்த உதவியும் பெறாத பலர் அவர் மீது...