சொத்துக்கள் யாருக்கு? 16 வருடங்களுக்கு முன்பே ஜெயலலிதா எடுத்த அதிரடி முடிவு
- IndiaGlitz, [Thursday,December 15 2016]
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பொதுச்செயலாளர் பதவி யாருக்கு என்ற கேள்விக்கே விடை தெரியாத நிலையில் தற்போது ஜெயலலிதாவின் சொத்துக்கள் யாருக்கு என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது.
ஜெயலலிதாவின் சொத்துக்கள் அனைத்தும் ரத்த சொந்தங்களுக்கா? அல்லது அவருடன் பல வருடங்கள் உடனிருந்த சசிகலாவிற்கா? என்ற கேள்வி அதிமுக தொண்டர்களிடையே எழுந்துள்ள நிலையில் ஜெயலலிதா எழுதிய உயில் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம், கொடநாடு எஸ்டேட், ஐதராபாத் திராட்சை தோட்டம் உள்ளிட்ட அனைத்து நமது எம்.ஜி.ஆர் பெஸ்ட் சாரிடபிள் டிரஸ்ட்டுக்கு கீழ் உள்ளதாகவும், இந்த டிரஸ்டின் அலுவலகம் ஐதராபாத்தில் உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சசிகலா உறவினர்கள் இந்த டிரஸ்டில் இருந்ததாகவும், ஆனால் அவர்களுடைய நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த ஜெயலலிதா, டிரஸ்ட் நிர்வாகிகளை அடியோடு மாற்றியுள்ளார். அதுமட்டுமின்றி கடந்த 2000 ஆம் ஆண்டு ஜெயலலிதாவே நேரில் ஐதராபாத் சென்று தனது ரத்த உறவினர்களை புதிய டிரஸ்ட் நிர்வாகிகளாக அறிவித்ததாகவும், இந்த டிரஸ்ட் நிர்வாகிகள் மற்றும் ஜெயலலிதா எழுதிய உயில் குறித்த வழக்கறிஞரின் அறிவிப்பு மிகவிரைவில் சட்டபூர்வமாக வெளிவரும் என்றும் பிரபல வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னாள் ஆந்திரமுதல் ராஜசேகர ரெட்டியும், ஒ.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ராஜசேகர ரெட்டியின் சாக்ஷி பத்திரிகையில் இந்த செய்தி விரிவாக வெளிவந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.