சொத்துக்கள் யாருக்கு? 16 வருடங்களுக்கு முன்பே ஜெயலலிதா எடுத்த அதிரடி முடிவு

  • IndiaGlitz, [Thursday,December 15 2016]

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பொதுச்செயலாளர் பதவி யாருக்கு என்ற கேள்விக்கே விடை தெரியாத நிலையில் தற்போது ஜெயலலிதாவின் சொத்துக்கள் யாருக்கு என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது.

ஜெயலலிதாவின் சொத்துக்கள் அனைத்தும் ரத்த சொந்தங்களுக்கா? அல்லது அவருடன் பல வருடங்கள் உடனிருந்த சசிகலாவிற்கா? என்ற கேள்வி அதிமுக தொண்டர்களிடையே எழுந்துள்ள நிலையில் ஜெயலலிதா எழுதிய உயில் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம், கொடநாடு எஸ்டேட், ஐதராபாத் திராட்சை தோட்டம் உள்ளிட்ட அனைத்து நமது எம்.ஜி.ஆர் பெஸ்ட் சாரிடபிள் டிரஸ்ட்டுக்கு கீழ் உள்ளதாகவும், இந்த டிரஸ்டின் அலுவலகம் ஐதராபாத்தில் உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சசிகலா உறவினர்கள் இந்த டிரஸ்டில் இருந்ததாகவும், ஆனால் அவர்களுடைய நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த ஜெயலலிதா, டிரஸ்ட் நிர்வாகிகளை அடியோடு மாற்றியுள்ளார். அதுமட்டுமின்றி கடந்த 2000 ஆம் ஆண்டு ஜெயலலிதாவே நேரில் ஐதராபாத் சென்று தனது ரத்த உறவினர்களை புதிய டிரஸ்ட் நிர்வாகிகளாக அறிவித்ததாகவும், இந்த டிரஸ்ட் நிர்வாகிகள் மற்றும் ஜெயலலிதா எழுதிய உயில் குறித்த வழக்கறிஞரின் அறிவிப்பு மிகவிரைவில் சட்டபூர்வமாக வெளிவரும் என்றும் பிரபல வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னாள் ஆந்திரமுதல் ராஜசேகர ரெட்டியும், ஒ.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ராஜசேகர ரெட்டியின் சாக்ஷி பத்திரிகையில் இந்த செய்தி விரிவாக வெளிவந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

'சிங்கம் 3' ரிலீஸ் தேதி மாற்றமா?

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கிய 'சிங்கம் 3' திரைப்படம் வரும் 23ஆம் தேதி வெளிவரும் என்று அறிவிப்புகள் ஏற்கனவே வெளிவந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதியில் மாற்றம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கபாலியுடன் கனெக்சன் ஆன அதர்வா படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' என்ற படத்தை இயக்கியதன் மூலம் உலகப்புகழ் பெற்றவர் இயக்குனர் பா.ரஞ்சித்.

அப்பல்லோ ரகசியம் வெளியானால் இந்தியாவில் பிரளயமே ஏற்படும். ஹேக்கர்ஸ் அதிரடி மிரட்டல் .

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனையின் கம்ப்யூட்டர்கள் ஹேக் செய்யப்பட்டு ஆயிரக்கணக்கான தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகவும், இந்த ரகசியங்களை வெளியிட்டால் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பிரளயம் ஏற்படும் என்றும் ஹேக்கர்கள் மிரட்டியுள்ளனர்.

சிசிடிவி பதிவுகளை ஒப்படையுங்கள். வங்கிகளுக்கு ஆர்பிஐ உத்தரவு

கடந்த நவம்பர் 8ஆம் தேதி ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு பின்னர் கள்ள நோட்டு, மற்றும் கருப்புப்பண முதலைகள் பல்வேறு வழிகளில் தங்கள் பணத்தை வெள்ளையாக மாற்ற முயன்றுள்ளனர்.

கீர்த்தி சுரேஷ் படத்தை வெகுவாகப் பாராட்டிய சென்சார் குழு

பாபி சிம்ஹா-கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் படம் ‘பாம்பு சட்டை’. அறிமுக இயக்குனர் ஆடம்ஸ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தை பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் மனோபாலா தயாரித்துள்ளார்.