ஜெயலலிதா சிகிச்சை வீடியோ குறித்து தினகரன் முக்கிய அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,November 11 2017]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது சசிகலாவால் எடுக்கப்பட்ட வீடியோ உரிய நேரத்தில் தேவைப்பட்டால் வெளியிடப்படும் என சசிகலாவின் உறவினர்கள் சிலர் அவ்வப்போது கூறி வந்தனர்.

இந்த நிலையில் இந்த வீடியோ ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்து வரும் விசாரணை ஆணையத்திடம் தரப்படும் என்று டிடிவி தினகரன் சற்றுமுன்னர் அறிவித்துள்ளார்.

ஆனால் இந்த வீடியோவை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையுடன் விசாரணை ஆணையத்தில் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.  

மேலும் வருமான வரி சோதனையில் ஆவணங்கள் எதுவும் கைப்பற்றவில்லை என்றும் எங்களிடம் பாதாள அறை எதுவும் இல்லை என்று கூறிய டிடிவி தினகரன் 3 மணி நேரத்தில் முடிக்க வேண்டிய சோதனை 3 நாட்களாக நீட்டித்து வருவதாக தெரிவித்தார்

More News

பிக்பாஸ் நடிகருக்கு மலையாள திரையுலகில் கிடைத்த வாய்ப்பு

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பலருக்கு நிகழ்ச்சி முடிந்த பின்னர் சினிமாவிலும் தொலைக்காட்சிகளிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

சென்னை திரையரங்கில் ரசிகர்களுடன் 'அறம்' பார்த்த நயன்தாரா

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'அறம்' திரைப்படம் நேற்று வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

மலேசியாவில் நட்சத்திர கலைவிழா: கமல், ரஜினி கலந்து கொள்கின்றனர்.

தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் இணைந்து, வரும் 2018 ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி நட்சத்திர விழா ஒன்றை மலேசியாவில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

சிம்புவை எதிர்த்து பாஜக போராட்டமா? திடீர் போலீஸ் பாதுகாப்பு

சமீபத்தில் சிம்பு பண மதிப்பிழப்பு குறித்த பாடல் ஒன்றை வெளியிட்டார் என்பது அனைவரும் தெரிந்ததே. 'தட்றோம் தூக்றோம்' என்று தொடங்கும் இந்த பாடலில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட

பத்மாவதி' படத்திற்கு துபாயில் இருந்து நிதி வந்ததா? சுப்பிரமணியன் சுவாமி குற்றச்சாட்டுக்கு படக்குழுவினர் பதில்

ரஜபுத்திர ராணி பத்மாவதி கேரக்டரில் தீபிகா படுகோனே நடித்துள்ள 'பத்மாவதி' திரைப்படம் வரும் டிசம்பர் 1ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.