ஜெயலலிதா இடத்தை காலண்டரில் பிடித்த சசிகலா
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் படங்களுடன் கூடிய 2017ஆம் ஆண்டு காலண்டர்களின் ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டு வருவதாக அச்சக உரிமையாளர்களின் தரப்பில் இருந்து செய்திகள் வெளிவருகின்றன.
ஆண்டுதோறும் சுமார் இரண்டு கோடி காலண்டர்கள் தமிழகம் முழுவதிலும் உள்ள அதிமுக நிர்வாகிகளால் அச்சடிக்கப்பட்டு தொண்டர்களுக்கு வழங்கப்படும். இந்த ஆண்டும் அதேபோல் அச்சடிக்க ஆர்டர்கள் கொடுத்திருந்த நிலையில் திடீரென கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதன்பின்னர் ஜெயலலிதா படம் போட்ட காலண்டர்களின் ஆர்டர்கள் குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த டிசம்பர் 6ஆம் தேதி ஜெயலலிதாவின் மறைவு செய்தி வெளியானதும் கிட்டத்தட்ட மொத்த ஆர்டர்களும் ரத்து செய்யப்பட்டதாகவும், ஜெயலலிதா மற்றும் சசிகலா படம் போட்ட காலண்டர்களும், எம்.ஜி.ஆர் மற்றும் சசிகலா படம் போட்ட காலண்டர்களும் புதிய ஆர்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.
ஏற்கனவே ஜெயலலிதா படம் போட்ட காலண்டர்கள் தயார் செய்தவர்களுக்கு அதிமுக நிர்வாகிகள் கூடுதல் தொகை கொடுத்து அதன் நஷ்டத்தை ஈடு செய்ய ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments