தீபாவின் புதிய கட்சியின் பெயர் மற்றும் கொடி

  • IndiaGlitz, [Friday,February 24 2017]

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று புதிய கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகம் செய்யவுள்ளதாக நேற்றே கூறினார்.

இந்நிலையில் இன்று அவர் தனது புதிய அரசியல் கட்சியின் பெயரை அறிவித்துள்ளார். எம்.ஜி.ஆர், அம்மா தீபா பேரவை என்பவதே அவருடைய புதிய கட்சியின் பெயர் ஆகும். இந்த கட்சியின் கொடியில் கருப்பு,சிவப்பு நிறத்தில் நடுவில் வெள்ளை வட்டம். அதில் ஜெயலலிதாவுக்கு எம்ஜிஆர் செங்கோல் கொடுத்த படம் பொறிக்கப்பட்டுள்ளது.

கட்சி மற்றும் கொடியை அறிமுகம் செய்து வைத்தவுடன் செய்தியாளர்களிடம் பேசிய தீபா, 'உண்மையான அதிமுக தொண்டர்கள் தன்னுடைய பின்னால் உள்ளதாகவும், இதனால் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை கண்டிப்பாக மீட்பேன் என்றும் கூறினார். மேலும் ஜெயலலிதா எந்த தவறும் செய்யாதவர் என்று கூறிய தீபா, எம்.ஜி.ஆர், அம்மா தீபா பேரவையின் பொருளாளராக செயல்படவுள்ளதாகவும், வரும் இடைத்தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்ட ஆர்.கே.நகரில் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் கூறினார்.

More News

'கபாலி' படம் நஷ்டம் என்பது உண்மையா? விளக்குகிறார் மதுரை திரையரங்கு உரிமையாளர்

பிரபல விநியோகிஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் உள்பட பெரிய ஸ்டார்களின் பல படங்கள் விநியோகிஸ்தர்களுக்கு நஷ்டத்தை கொடுத்ததாகவும், ஆனால் அந்த படங்கள் 50 நாள், 75 நாள், 100 நாள், 150 நாள், 175 நாள், 200 நாள் ஓடியதாக பொய்யான தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பதாகவும் பேசினார்...

10 வருடங்களுக்கு முன்பே பாவனாவின் கொடுமையை அனுபவித்த பிரபல பெண் இயக்குனர்

பிரபல நடிகை பாவனா கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவம் திரைத்துறையை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விஷயத்தில் பாவனா தைரியமாக முன்வந்து போலீஸ் புகார் கொடுத்ததை அனைவரும் பாராட்டி வருகின்றனர்...

ஓபிஎஸ் அணியில் ஜெயா டிவி செய்தி வாசிப்பாளர்

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது யார்? என்ற போட்டியின் காரணமாக சசிகலா அதிமுக, ஓபிஎஸ் அதிமுக என இரண்டு அணிகளாக பிரிந்தன...

பாடகி சுசித்ராவின் சர்ச்சைக்குரிய பதிவுகளுக்கு கணவர் விளக்கம்

கடந்த சில நாட்களாக பிரபல பாடகி சுசித்ராவின் சமூக வலைத்தள பக்கத்தில் பிரபல நடிகர்கள் குறித்து சர்ச்சைக்குரிய பதிவுகள் வெளிவந்தன.

அத்தைக்கு பதிலாக தண்டனை அனுபவிக்க தயாரா? தீபாவுக்கு நடிகர் ஜீவா கேள்வி

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் தமிழக அரசியல் எந்த திசையில் செல்கிறது என்றே தெரியவில்லை. நாளொரு திருப்பமும், பொழுதொரு பிரேக்கிங் நியூஸ்களும் வந்து கொண்டிருக்கின்றது.