தீபாவைக் காணவில்லை- ஜெ. உறவினர் அதிர்ச்சி புகார்

  • IndiaGlitz, [Wednesday,December 14 2016]

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஜெயகுமாரைக் காணவில்லை என்று அவரது உறவினர் அம்ருதா குற்றம்சாட்டியுள்ளார்.

ஜெயலலிதாவின் சகோதரி ஷைலஜாவின் மகள் அம்ருதா. இவர் பெங்களூருவில் வசிக்கிறார். இன்று பெங்களூரு ஊடகங்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் தனது மாமாவின் மகள் தீபாவை சென்னையில் உள்ள அவரது வீட்டில் சந்திக்க திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால் கடந்த திங்கட்கிழமையிலிருந்து தீபாவின் வீடு பூட்டி இருப்பதாகவும் தீபாவை தொலைபேசியிலும் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும் அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு கட்சியின் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் பரிந்துரைக்கப்படுபவருமான சசிகலாவை, தீபா கடுமையாக விமர்சித்துவந்தார். இந்நிலையில் சசிகலாவை எதிர்த்ததால் தனது உறவினர் தீபாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக அம்ருதா கூறியுள்ளார்.

ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவரைக் காண வந்த தீபா, மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதேபோல் தானும் அப்போலோ மருத்துவமனைக்கு வந்ததாகவும் ஆனால் தன்னையும் ஜெயலலிதாவைப் பார்க்க அனுமதிக்கவில்லை என்று இப்போது கூறியுள்ளார்.

More News

ரகுமானுக்கு மேலும் இரண்டு ஆஸ்கர் விருதுகள் கிடைக்குமா?

2009ல் ’ஸ்லம் டாக் மில்லியனர்’ என்ற திரைப்படத்துக்கு இசையமைத்ததற்காக ஒன்றுக்கு இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று இந்திய நாட்டுக்குப் பெருமை சேர்த்தவர் ஏ.ஆர்.ரகுமான். சினிமா உலகின் மிக உயரிய சர்வதேச ஆங்கீகாரமாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதை முதல்முறையாக வென்ற இந்திய இசைக் கலைஞர் ரகுமான் ஆவார். இதுவரை ஆஸ்கர் வென்றுள்ள ஒரே இந்திய இசĭ

ஜெ. மரணம் இயற்கையானதா?- உச்ச நீதிமன்றத்தில் மனு

முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா மறைந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. இன்னும் அவரது இழப்பிலிருந்து தமிழக மக்களும் அஇஅதிமுக வின் கோடான கோடி தொண்டர்களும் மீளவில்லை.

சூர்யாவுடன் நேருக்கு நேர் மோதும் சசிகுமார்

நடிகர்-தயாரிப்பாளர் சசிகுமாரின் அடுத்த படம் ‘பலே வெள்ளையத் தேவா’ டிசம்பர் 23, 2016 அன்று கிறிஸ்துமஸ் விடுமுறை சீசனுக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'பைரவா' பாடல்கள் உரிமை யாருக்கு?

வர்தா புயல் பாதிப்புகளிலிருந்து சென்னையும் தமிழகத்தின் இதர பகுதிகளும் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு கொண்டிருக்கின்றன.