நான் காணாமல் போகவில்லை - ஜெ.உறவினர் தீபா

  • IndiaGlitz, [Thursday,December 15 2016]

மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஜெயகுமாரைக் காணவில்லை என்று பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா நேற்று ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்திருந்தார். அந்த அம்ருதா, தன்னை ஜெயலலிதாவின் தங்கையான சைலஜாவின் மகள் என்றும் கூறிக்கொண்டார்.

ஆனால் இன்று தீபா, தான் தொலைந்ததாக சொல்லப்பட்ட தகவல் முற்றிலும் பொய் என்றும் தான் பாதுகாப்பாக இருப்பதாகவும் சென்னை ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதோடு இந்த அம்ருதா யார் என்றே தனக்குத் தெரியாது என்றும் அவர் தன்னை ஜெயலலிதாவின் உறவினர் என்று பொய் சொல்வதாகவும் கூறியுள்ளார்.

மேலும் ஜெயலலிதாவின் உடன் பிறந்தவர் ஒரே ஒரு சகோதரதான் என்றும் அது தனது தந்தை ஜெயகுமார்தான் என்றும் தெரிவித்துள்ளார் தீபா ஜெயகுமார்.

More News

'சரோஜா' தயாரிப்பாளருக்கு வெங்கட்பிரபுவின் அடுத்த படம்

வெங்கட்பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'சென்னை 28 II' திரைப்படம் பணத்தட்டுப்பாடு, வர்தா புயல் போன்ற பிரச்சனைகளையும் மீறி நல்ல வசூல் பெற்றுள்ளது.

அதிமுகவின் அடுத்த பொதுச் செயலாளர் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு

முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் மறைவையடுத்து விரைவில் நடைபெற இருக்கும் அஇஅதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் அடுத்த பொதுச் செயலாளராக கட்சியினரால் ’சின்னம்மா’ என்று அழைக்கப்படும் வி.கே. சசிகலா

வர்தா புயலால் ஏற்பட்ட ஒரே நன்மை

கடந்த திங்கள் அன்று வர்தா புயல் ஏற்படுத்திய பாதிப்பால் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஆயிரக்கணக்கான மரங்கள் வேறோடு வீழ்ந்தது.

'எஸ்-3' ரிலீஸ் தேதி குறித்து சூர்யாவின் முக்கிய அறிவிப்பு

சூர்யா, அனுஷ்கா ஷெட்டி, ஸ்ருதிஹாசன் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள சிங்கம் படத்தின் 3ஆம் பாகமான 'எஸ் 3' படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி டிசம்பர் 23 என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதைவிட எனக்கு வேறு என்ன வேண்டும்? நன்றி தலைவா.. தனுஷ்

தனுஷ் நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் 'வேலையில்லா பட்டதாரி 2' என்ற திரைப்படத்தை இயக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.