ஜெயலலிதா நினைவிடத்தின் பாதுகாப்பு போலீஸ் திடீர் தற்கொலை! காரணம் என்ன?
- IndiaGlitz, [Sunday,March 04 2018]
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு இல்லம் சென்னை மெரினாவில் எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகில் உள்ளது. இந்த நினைவிடத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். எனவே இந்த நினைவிடத்திற்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை ஆயுதப்படை பிரிவில் பணியாற்றிய போலீஸ்காரர் அருள் என்பவர் நினைவிடத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென தனது கையில் இருந்த துப்பாக்கியால் தனக்கு தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த அதிர்ச்சி நிகழ்வை நேரில் பார்த்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் முன்பே அவர் உயிரிழந்தார்.
மதுரையை சேர்ந்த அருள் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அருள் தற்கொலை செய்த இடத்தை சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் பார்வையிட்டார்.