ஜெயலலிதா நினைவிடத்தின் பாதுகாப்பு போலீஸ் திடீர் தற்கொலை! காரணம் என்ன?

  • IndiaGlitz, [Sunday,March 04 2018]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு இல்லம் சென்னை மெரினாவில் எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகில் உள்ளது. இந்த நினைவிடத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். எனவே இந்த நினைவிடத்திற்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று காலை ஆயுதப்படை பிரிவில் பணியாற்றிய போலீஸ்காரர் அருள் என்பவர் நினைவிடத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென தனது கையில் இருந்த துப்பாக்கியால் தனக்கு தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த அதிர்ச்சி நிகழ்வை நேரில் பார்த்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் முன்பே அவர் உயிரிழந்தார்.

மதுரையை சேர்ந்த அருள் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அருள் தற்கொலை செய்த இடத்தை சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் பார்வையிட்டார்.

More News

பிரபல நகைச்சுவை நடிகர் ரமேஷ்திலக் திருமணம்

நேரம், வாயை மூடி பேசவும், சூது கவ்வும், டிமாண்டி காலனி, காக்கா முட்டை, வேதாளம் உள்பட பல படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்தவர் ரமேஷ் திலக்.

ரஜினி-ஷங்கருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ: பரபரப்பு தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய '2.0' திரைப்படத்தை லைகா நிறுவனம் சுமார் ரூ.500 கோடி செலவில் தயாரித்துள்ளது.

தியேட்டர் ரிலீசுக்கு முன்பே டிவியில் வெளியாகும் ஜோதிகா படம்

ஒரு திரைப்படம் தியேட்டரில் வெளியாகி ஒருசில மாதங்கள் கழித்து டிவியில் ஒளிபரப்புவது வழக்கம். ஆனால் 'மகளிர் மட்டும்' திரைப்படம் தற்போது “மாயா வர்ணங்கள்” என்ற பெயரில் மலையாளத்தில் டப் செய்யப்பட்டுள்ளது

உளவியல் அரசியல் பேசும் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்

'கபாலி', காலா' படங்களை இயக்கிய பா.ரஞ்சித் தனது நீலம் புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்து வரும் படம் 'பரியேறும் பெருமாள். இயக்குநர் ராம் அவர்களின் இணை இயக்குநரான மாரிசெல்வராஜ்,

தளபதி 62' படத்தில் இணைந்த பிரபல அரசியல்வாதி

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 62' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்.