இரும்பு பட்டாம்பூச்சியின் இறுதி பயணம். அமெரிக்க ஊடகங்களின் தலைப்பு செய்திகளில் ஜெ...
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக முதல்வராக இருந்து தனது வாழ்க்கையையே தமிழக மக்களுக்காக அர்ப்பணித்த ஜெயலலிதாவின் மறைவால் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவே சோகத்தில் மூழ்கியது. மேலும் இலங்கை அதிபர் சிறிசேனா உள்பட உலக தலைவர்களும் ஜெயலலிதாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் முன்னணி பத்திரிகையான 'தி டெலிகிராப்' இன்றைய தலைப்பு செய்தியில் ஜெயலலிதாவின் மறைவு குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் 'இரும்பு பட்டாம்பூச்சியின் இறுதி பயணம்' என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ள 'தி டெலிகிராப்' ஜெயலலிதாவின் சாதனைகளையும், அவர் சந்தித்த சோதனைகளையும் குறிப்பிட்டுள்ளது.
ஒரு மாநில முதல்வரின் மரணம், 10,000 மைல்கள் கடந்த ஒரு பத்திரிகையில் தலைப்பு செய்தியாக வெளிவந்திருப்பது அவருக்கு உலகெங்கும் புகழ் இருப்பதை நிரூபித்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments