மரணத்திற்கு பின்பும் மக்களின் பசியாற்றும் 'தெய்வத்தாய்' ஜெயலலிதா
Send us your feedback to audioarticles@vaarta.com
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட எம்.ஜி.ஆர். நினைவுச்சின்ன வளாகத்தில் இன்று நான்காவது நாளாக அஞ்சலி செலுத்தும் பொதுமக்கள் கூட்டம் குவிந்து கொண்டே இருக்கின்றது. காலை முதல் இரவு வரை அம்மாவுக்கு அஞ்சலி செலுத்த வரும் பொதுமக்களின் பசியை அதிமுகவினர் போக்கி வருகின்றனர்.
காலையில் இட்லி, பொங்கல், கிச்சடி, மதியம் தயிர் சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம், சாம்பார் சாதம், இரவில் இட்லியும் வழங்கப்பட்டு வருகிறது. உணவு மட்டுமின்றி குடிப்பதற்கு தண்ணீர் பாட்டிலும், பாக்கெட்டுகளும் இலவசமாக வழங்கி வருகின்றனர். இந்த உணவை வாங்க வரிசையில் நிற்கும் பொதுமக்கள் அம்மா இருந்தாலும், இறந்தாலும் ஏழை மக்களின் பசியை போக்கும் தெய்வத்தாய் என்று உருக்கத்துடன் கூறுகின்றனர்.
மேலும் ஜெயலலிதா அம்மா இன்னும் மறையவில்லை என்றும் தங்கள் மனங்களில் என்றும் அவர்கள் வாழ்ந்து கொண்டிருப்பார் என்றும் கூறிய பொதுமக்கள் இந்த உணவை அம்மாவின் கைகளால் வாங்குவது போன்ற ஒரு உணர்வு ஏற்படுவதாகவும் அவர்கள் கூறினர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments