ஜெயலலிதா உடலை தோண்டி எடுத்து இறந்த தேதியை துல்லியமாக கண்டுபிடிக்கலாம். தடயவியல் நிபுணர்
- IndiaGlitz, [Monday,January 02 2017]
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மரணம் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி உள்பட பலர் தங்கள் சந்தேகங்களை எழுப்பியுள்ள நிலையில் ஒருவேளை நீதிமன்ற உத்தரவின்படி ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்தால் என்ன ஆகும் என்பது குறித்து பிரபல தடயவியல் நிபுணர் பேராசிரியர் ப.சந்திரசேகரன் பிரபல நாளிதழ் ஒன்றில் பேட்டி கொடுத்துள்ளார்.
அந்த பேட்டியில் 'ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளது என்று நெருங்கிய உறவினர்கள் புகார் செய்தால் மட்டுமே நீதிமன்றம் பிணத்தை தோண்டியெடுக்க உத்தரவிடும் என்றும் ஆனாலும் இது அவசியம் இல்லை என்பதே தனது கருத்து' என்றும் கூறியுள்ளார்.
ஒரு நோயாளி இறந்த பின்னர் பல நாட்கள் உடலை கெடாமல் வைத்திருக்க அவசர சிகிச்சை பிரிவில் சாத்தியம் இல்லை என்றும் அதற்கு மைனஸ் 4 டிகிரி குளிரூட்டப்பட்ட இடம் தேவை என்றும், ஜெயலலிதா விஷயத்தில் இது ஒரு கற்பனையான குற்றச்சாட்டு என்றும் அவர் தெரிவித்துள்ளார்
மேலும் ஜெயலலிதாவின் உடல் சந்தனப்பேழையில் வைக்கப்பட்டு இருப்பதால் உடல் அதிக அளவு அரிக்கப்பட்டிருக்க வாய்ப்பு இல்லைஎன்றும் உடலை மிகவும் கவனமாக வெளியே எடுத்து திறமையானவர்கள் பரிசோதனை நடத்தினால் ஜெயலலிதா இறந்த தேதியைக்கூட துல்லியமாக கண்டு பிடித்துவிட முடியும் என்றும் ஆனால் இதற்கு நீதிமன்ற உத்தரவு தேவை என்றும் சந்திரசேகரன் கூறியுள்ளார்.