இரும்பு பட்டாம்பூச்சியின் இறுதி பயணம். அமெரிக்க ஊடகங்களின் தலைப்பு செய்திகளில் ஜெ...

  • IndiaGlitz, [Wednesday,December 07 2016]

தமிழக முதல்வராக இருந்து தனது வாழ்க்கையையே தமிழக மக்களுக்காக அர்ப்பணித்த ஜெயலலிதாவின் மறைவால் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவே சோகத்தில் மூழ்கியது. மேலும் இலங்கை அதிபர் சிறிசேனா உள்பட உலக தலைவர்களும் ஜெயலலிதாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில் அமெரிக்காவின் முன்னணி பத்திரிகையான 'தி டெலிகிராப்' இன்றைய தலைப்பு செய்தியில் ஜெயலலிதாவின் மறைவு குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் 'இரும்பு பட்டாம்பூச்சியின் இறுதி பயணம்' என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ள 'தி டெலிகிராப்' ஜெயலலிதாவின் சாதனைகளையும், அவர் சந்தித்த சோதனைகளையும் குறிப்பிட்டுள்ளது.

ஒரு மாநில முதல்வரின் மரணம், 10,000 மைல்கள் கடந்த ஒரு பத்திரிகையில் தலைப்பு செய்தியாக வெளிவந்திருப்பது அவருக்கு உலகெங்கும் புகழ் இருப்பதை நிரூபித்துள்ளது.

More News

பல்கேரியாவில் இருந்து அஜித் சென்னை வந்தது எப்படி? வெளிவராத தகவல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவை கேள்விப்பட்டவுடன் பல்கேரியாவில் படப்பிடிப்பில் இருந்த அஜித்...

பல பிரதமர்களுடன் நெருங்கிப் பழகியவர் சோ. ரஜினிகாந்த் புகழாரம்

பிரபல பத்திரிகையாளரும், துக்ளக் ஆசிரியரும், ஜெயலலிதா உள்பட பல அரசியல் பிரபலங்களுக்கு நெருக்கமானவருமான சோ ராமசாமி...

போயஸ் கார்டன் 'வேதா இல்லம்' அம்மாவின் நினைவு இல்லமாக மாறுமா?

புரட்சி தலைவி செல்வி ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக கட்சி என்ன ஆகுமோ என்று பலரது எண்ணமாக உள்ளது...

பன்முக தன்மை கொண்ட சோ அவர்களின் வாழ்க்கைக்குறிப்பு

நாடக, திரைப்பட நடிகர், துக்ளக் ஆசிரியர், அரசியல் விமர்சகர், மோடி, ஜெயலலிதா உள்பட பல அரசியல் தலைவர்களுக்கு நெருங்கிய நண்பர்...

ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்படும் நேரம்-இடம்

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணம் அடைந்த ஜெயலலிதாவின் உடல் இன்னும் சற்று நேரத்தில் சம்பிரதாயங்கள்...