ஜெயலலிதா சிகிச்சை, மரணம்; உண்மையில் நடந்தது என்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி காய்ச்சல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், இரண்டு நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவார் என்று தான் முதலில் செய்தி வந்தது. ஆனால் நாள் ஆக, ஆக அவருடைய உடல்நிலை குறித்த உண்மைகள் வெளிவர தொடங்கியது. இந்த நிலையில் தற்போது புதியதலைமுறை செய்தி சேனலில் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது என்ன நடந்தது? அப்போது அவரது உடல்நிலை என்ன? பின்னர் அளிக்கப்பட்ட சிகிச்சை என்ன? என்பது குறித்த செய்திகள் வெளியாகி வருகிறது.
ஜெயலலிதா வீட்டில் இருந்தபோது படுக்கையில் இருந்த முதலமைச்சரை எழுப்ப முயன்றபோது அசைவு மட்டுமே ஜெயலலிதா உடலில் இருந்துள்ளதாகவும், ஆபத்தான நிலையில் தான் மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் மருத்துவமனை அறிக்கை உறுதி செய்கிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போதே அவருக்கு நிமோனியா காய்ச்சல், ரத்த அழுத்தம் இருந்ததாகவும் தெரிகிறது.
மேலும் சராசரியாக 120/80 என்று இருக்க வேண்டிய ரத்த அழுத்தம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்பொதே 140/70 ஆக இருந்ததாகவும், சர்க்கரை அளவு 508 எம்ஜி வரை இருந்ததாகவும் மருத்துவமனை அறிக்கை ஒன்று கூறுகின்றது.
மேலும் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாகவே அவர் காயச்சல் மற்றும் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அதன் காரணமாக ஆக்சிஜன் அளவுக்கு 100க்கு 45% மட்டுமே இருந்ததாகவும் தெரிகிறது. சர்க்கரை அதிகரிப்பு, ரத்த அழுத்தம், தைராய்டு, நிமோனியா காய்ச்சல் ஆகிய பாதிப்புகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும்போதே இருந்ததால் அவருக்கு சரியான மருத்துவ கவனிப்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளதாக அந்த செய்தி தெரிவித்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments