முதல்வரோடு ஓடிய அப்பு இனி யாருக்காக ஓடுவார்?

  • IndiaGlitz, [Thursday,December 08 2016]

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு, கருப்பு பூனை பாதுகாப்பு இருந்த போதிலும் அவருக்கு மிகவும் நம்பிக்கையான ஒரு பாதுகாவலர் என்றால் அவர் அப்பு என்று செல்லமாக அழைக்கப்படும் பாதுகாவலர் தான்.

ஜெயலலிதா எந்த பிரயாணத்தை மேற்கொண்டாலும் கிளம்புவதற்கு முன் அவர் கேட்கும் முதல் வார்த்தை 'அப்பு வந்துவிட்டாரா? என்பதுதான். அந்த அளவுக்கு முதல்வரின் பிரதான பாதுகாவலராக இருந்த அப்பு, கிலோ மீட்டர் கணக்கில் அவரது காரில் தொங்கிக்கொண்டு செல்லும் பிராதன பாதுகாவலர். இவர் தமிழக காவல் துறையைச் சேர்ந்த ஆய்வாளர் என்பது குறிப்பிடத்தக்கது.


முதல்வராக இருந்தபோது ஜெயலலிதா கலந்து கொள்ளும் நிகழ்ச்சி மேடை வருவதற்கு ஒரு கிலோ மீட்டர் வருவதற்கு முன்பே காரில் இருந்து இறங்கி, வண்டிக்கு இணையாக ஓடி வந்து வழியை ஏற்படுத்தி கொடுப்பார். அந்த அளவுக்கு முதல்வரை ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் பாதுகாப்பாக அழைத்துக் கொண்டு சென்ற அப்பு, முதல்வரின் இறுதிப்பயணத்தின்போதும் கவலை தோய்ந்த முகத்துடன் கலந்து கொண்டார். முதல்வருடன் அன்னியோன்யமாக இருந்த அப்பு இனி யாருக்காக ஓடுவார்?

More News

ஜெயலலிதா இறக்கும் முன்னரே இரங்கல் தெரிவித்தாரா மோடி?

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த திங்கள் அன்று இரவு 11.30 மணிக்கு இறந்தார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

பல்கேரியா கிளம்பினார் தல அஜித்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இறுதியஞ்சலி செலுத்துவதற்காக பல்கேரிய படப்பிடிப்பில் இருந்த தல அஜித், சுமார் 16 மணி நேரம் பயணம் செய்து சென்னை வந்தார்.

இரும்பு பட்டாம்பூச்சியின் இறுதி பயணம். அமெரிக்க ஊடகங்களின் தலைப்பு செய்திகளில் ஜெ...

தமிழக முதல்வராக இருந்து தனது வாழ்க்கையையே தமிழக மக்களுக்காக அர்ப்பணித்த ஜெயலலிதாவின் மறைவால்...

பல்கேரியாவில் இருந்து அஜித் சென்னை வந்தது எப்படி? வெளிவராத தகவல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவை கேள்விப்பட்டவுடன் பல்கேரியாவில் படப்பிடிப்பில் இருந்த அஜித்...

பல பிரதமர்களுடன் நெருங்கிப் பழகியவர் சோ. ரஜினிகாந்த் புகழாரம்

பிரபல பத்திரிகையாளரும், துக்ளக் ஆசிரியரும், ஜெயலலிதா உள்பட பல அரசியல் பிரபலங்களுக்கு நெருக்கமானவருமான சோ ராமசாமி...