குப்பைக்கு சென்ற ஜெயலலிதா படம் போட்ட காலண்டர். அதிமுக தொண்டர்கள் வேதனை
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜெயலலிதா இருந்தவரை புரட்சி தலைவி, அம்மா, கண்கண்ட தெய்வம் என்று போற்றி வந்த பெரும்பாலான அதிமுக நிர்வாகிகள் அவர் மறைந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் அவரை கிட்டத்தட்ட மறந்துவிட்டதாக அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
ஒவ்வொரு வருடமும் அதிமுக படம் போட்ட காலண்டர்களை அச்சடித்து விநியோகம் செய்ய அதிமுக நிர்வாகிகள் இடையே கடும் போட்டி இருக்கும். இந்த ஆண்டும் அதேபோல் ஜெயலலிதா படம் போட்ட காலண்டர்கள் அச்சடிக்க ஆர்டர்கள் கொடுக்கப்பட்டன.
ஆனால் டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதா மரணம் அடைந்ததும், ஆர்டர் கொடுக்கப்பட்ட பெரும்பாலான ஜெயலலிதா படம் போட்ட காலண்டர்கள் ரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக ஜெயலலிதா-சசிகலா படம் போட்ட காலண்டார்கள் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் ஜெயலலிதா படம் போட்ட காலண்டர் அட்டை வீணாகி போனதாகவும், அவற்றை அச்சக உரிமையாளர்கள் குப்பைத்தொட்டியில் போட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்துள்ளது. குப்பைத்தொட்டியில் ஜெயலலிதா படம் போட்ட காலண்டர்களை பார்க்கும் அதிமுக தொண்டர்கள் கடும் வேதனையில் உள்ளதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments