ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தை இயக்கும் அஜித்-விஜய் இயக்குனர்

  • IndiaGlitz, [Thursday,August 16 2018]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை உருவாக்க கோலிவுட் திரையுலகில் பலர் முயற்சித்து வந்த நிலையில் தற்போது இயக்குனர் விஜய், இந்த படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் அஜித் நடித்த 'கிரீடம்', விஜய் நடித்த 'தலைவா' உள்பட பல திரைப்படங்களை இயக்கியவர் என்பது குறிப்ப்பிடத்தக்கது.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இந்த படத்தை வைப்ரி மீடியா என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதே நிறுவனம் தான் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவ் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதாவின் திரையுலக மற்றும் அரசியல் வாழ்க்கை குறித்த இந்த படத்தின் திரைக்கதையை இயக்குனர் விஜய் எழுத ஆரம்பித்துவிட்டதாகவும், ஸ்கிரிப்ட் முடிந்தபின்னர் ஜெயலலிதா கேரக்டரில் நடிக்கும் நடிகையின் தேர்வு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே ஜெயலலிதா கேரக்டரில் நடிக்க த்ரிஷா உள்பட ஒருசில முன்னணி நடிகைகள் ஆர்வம் காட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கட்டணம் கட்டினால் ரஜினிக்கு பாடம் எடுக்க தயார்? அமைச்சர் ஜெயகுமார்

சமீபத்தில் நடந்த கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 'அதிமுகவினர் எம்ஜிஆர் படத்தின் அருகே கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்

மகத்தின் மோசடி விளையாட்டு: ஐஸ்வர்யா ஆவேசம் அடையாதது ஏன்?

பிக்பாஸ் தனது போட்டியாளர்களுக்கு கொடுக்கும் டாஸ்க்குகள் அனைத்துமே சிறுபிள்ளைத்தனமாகவும், முட்டாள்த்தனமாகவும் இருப்பதாக ஏற்கனவே விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

சென்னை மழை குறித்து வெதர்மேன் கூறும் தகவல்

சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் நல்ல மழை பெய்த நிலையில் இன்றும் சென்னையில் மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.

அஜித்தின் அறிவியல் குழுவுக்கு அப்துல்கலாம் விருது: தமிழக அரசு அறிவிப்பு

சமீபத்தில் தல அஜித்தின் ஆலோசனையில் தக் ஷா என்ற மாணவர்கள் குழு ஒன்று உருவாக்கியுள்ள ஆளில்லா விமானம் உலக சாதனை செய்தது என்பதும்,

'செக்க சிவந்த வானம்': தியாகு கேரக்டரில் நடிக்கும் நடிகர் யார் தெரியுமா?

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'செக்க சிவந்த வானம்' திரைப்படத்தில் நான்கு முன்னணி நடிகர்களான அரவிந்தசாமி, சிம்பு, விஜய்சேதுபதி மற்றும் அருண்விஜய் ஆகியோர்கள் நடித்துள்ளனர் என்பது தெரிந்ததே