பிரபல இயக்குனரின் கைவண்ணத்தில் ஜெயலலிதா திரைப்படம்

  • IndiaGlitz, [Tuesday,January 03 2017]

ஆறு முறை தமிழக முதல்வராக பொறுப்பேற்று தமிழகத்தின் வளர்ச்சிக்காக பல முன்னேற்றமான திட்டங்களை கொண்டு வந்த ஜெயலலிதா கடந்த மாதம் 5ஆம் தேதி கோடிக்கணக்கான தமிழக மக்களை தவிக்க வைத்துவிட்டு மரணம் அடைந்தார். அவர் மரணம் அடைந்து ஒரு மாதம் ஆகியும் மக்கள் இன்னும் ஆழ்ந்த துயரத்தில் இருந்து மீளவில்லை.
இந்நிலையில் பிரபல இயக்குனர் தாசரி நாராயண ராவ், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைக்கதை அமைக்கும் பணிகளை அவர் தொடங்கிவிட்டதாகவும், இந்த படத்திற்காக அவர் 'அம்மா' என்ற டைட்டிலை பதிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் தயாராகவுள்ள இந்த படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் யார் நடிப்பார்கள் என்பதை அவர் விரைவில் அறிவிப்பார் என தெரிகிறது. ஏற்கனவே த்ரிஷா மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நாளை முதல் 'விஐபி' டீமில் இணையும் 'தொண்டன்' சமுத்திரக்கனி

சமுத்திரக்கனி தயாரித்து இயக்கி நடித்த 'அப்பா' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து தற்போது அவர்...

பொதுச்செயலாளர் பதவியேற்ற சசிகலாவுக்கு கிடைத்த முதல் வெற்றி

அதிமுக பொதுச்செயலாளராக சமீபத்தில் பதவியேற்ற சசிகலாவுக்கு எதிராக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா...

குப்பைக்கு சென்ற ஜெயலலிதா படம் போட்ட காலண்டர். அதிமுக தொண்டர்கள் வேதனை

ஜெயலலிதா இருந்தவரை புரட்சி தலைவி, அம்மா, கண்கண்ட தெய்வம் என்று போற்றி வந்த பெரும்பாலான...

பொங்கலுக்கு முன் மீண்டும் ஒரு புயல். சென்னை தாங்குமா?

கடந்த மாதம் 12ஆம் தேதி வர்தா புயலின் தாக்கத்தால் சென்னை உள்பட மூன்று மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்தது...

கம்போஸிங் ஓவர். விரைவில் ரிக்கார்டிங். ஆச்சரியம் தரும் சிம்புவின் சுறுசுறுப்பு

பொதுவாக சிம்பு படப்பிடிப்புக்கு தாமதமாக வருவார் என்றும் அவரது படங்கள் தாமதமாக வெளியாகும் என்றும் கூறப்படுவதுண்டு...