ஜெயலலிதா டிசம்பர் 4ஆம் தேதியே இறந்துவிட்டார்: திவாகரன் திடுக்கிடும் தகவல்

  • IndiaGlitz, [Wednesday,January 17 2018]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் தேதி டிசம்பர் 5ஆம் தேதி காலமானார் என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. ஆனால் அவரது மரணம் குறித்து பெரும் சந்தேகம் எழுந்த நிலையில் இதுகுறித்து விசாரணை செய்ய தமிழக அரசு விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்துள்ளது. நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையிலான இந்த ஆணையம் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்து வருகிறது.

இந்த நிலையில் சற்றுமுன் சசிகலாவின் சகோதரர் திவாகரன் ஜெயலலிதாவின் மரணம் குறித்து திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். ஜெயலலிதா டிசம்பர் 4, 2016 அன்று மாலை 5.15 மணிக்கு உயிரிழந்துவிட்டார் என்றும் அப்போலோ நிர்வாகம் தனது மருத்துவமனைக்கான பாதுகாப்பை உறுதி செய்த பிறகே அவர் இறப்பை தாமதப்படுத்தி அறிவித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

திவாகரனின் இந்த தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஒரு மாநிலத்தின் முதல்வர் மரணத்தை கிட்டத்தட்ட ஒருநாள் முழுவதும் நாட்டு மக்களுக்கு மறைத்திருந்த இந்த  விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.