தினகரன் குடும்பத்தை அடியோடு ஒதுக்குவோம். ஜெயகுமாரின் திடீர் பல்டிக்கு என்ன காரணம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று வரை சின்னம்மா சசிகலா, துணை பொதுச்செயலாளர் தினகரன் என ஜால்ரா போட்டு வந்த அதிமுக அம்மா அணியை சேர்ந்தவர்கள் இன்று திடீரென சசிகலா குடும்பத்தினர்களை குறிப்பாக தினகரனை ஒதுக்க ஆரம்பித்துள்ளதை பொதுமக்களும் அதிமுக தொண்டர்களும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.
சசிகலா சிறைக்கு சென்றுவிட்ட நிலையில் தினகரனையும் ஒதுக்கினால்தான் கட்சியும் சின்னமும் கைக்கு வரும் என்றும், மக்கள் செல்வாக்குள்ள ஓபிஎஸ் அவர்களை இணைத்தால் தான் இனி அரசியல் செய்ய முடியும் என்றும் மூத்த அமைச்சர்கள் மிக தாமதமாக புரிந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதன் வெளிப்பாடாக சற்று முன் செய்தியாளர்களை சந்தித்த மூத்த அமைச்சர் ஜெயகுமார், டிடிவி தினகரன் குடும்பத்தை முழுமையாக ஒதுக்கி வைத்துவிட்டு ஆட்சியை தொடர்ந்து சிறப்பாக நடத்துவது என்று முடிவு செய்துள்ளதாகவும், கட்சியும் ஆட்சியும் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடாது என்பதே ஒவ்வொரு அதிமுக தொண்டனின் எண்ணம் என்றும் ஆவேசமாக கூறியுள்ளார்.
மேலும் ஒற்றுமையாக கட்சியை வழி நடத்துவது அனைவரின் விருப்பம் என்று கூறிய ஜெயகுமார் கட்சியை வழிநடத்த குழு அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
எனவே அதிமுகவின் உண்மையான தொண்டர்களின் எண்ணங்களை இப்போதுதான் ஜெயகுமார் உள்ளிட்டோர் புரிந்து கொண்டார்களா? அல்லது சசிகலா குடும்பத்தை வெளியேற்றினால்தான் ஆட்சியும் கட்சியும் தப்பிக்கும் என்று மத்திய அரசு மிரட்டலால் இந்த கருத்தை கூறினார்களா? என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout