கமல் டிரம்ப்பை சந்தித்தாலும் எங்களுக்கு கவலை இல்லை: அமைச்சர் ஜெயக்குமார்
- IndiaGlitz, [Thursday,September 21 2017]
உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களை சந்தித்ததையே தமிழக அரசியல்வாதிகள் ஆச்சரியத்துடன் பார்த்த கதை தெரிந்ததே
இந்த நிலையில் சற்றுமுன்னர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் கமல்ஹாசனை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை செய்துள்ளார். இருவருமே ஊழலுக்கு எதிரானவர்கள் என்பதால் ஒன்றிணைந்து செயல்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த சந்திப்பு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறியபோது, 'கமல்ஹாசன் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கூட போய் சந்தித்தாலும் எங்களுக்கு கவலையில்லை' என்று கூறியுள்ளார்.
அமைச்சரின் இந்த கருத்துக்கு கமல் ரசிகர்களும் நடுநிலையாளர்களும் டுவிட்டரில் பதிலடி கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது