காமெடித்துறை அமைச்சர் இவர்தான்: ஸ்ரீபிரியா
- IndiaGlitz, [Friday,June 22 2018]
நடிகர் கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்ததில் இருந்தே அவரை அதிமுக அமைச்சர்கள் ஒவ்வொரு நாளும் விமர்சனம் செய்து கொண்டிருப்பது தெரிந்ததே. அதிலும் குறிப்பாக அமைச்சர் ஜெயகுமார், கமல்ஹாசனையும் அவரது நடவடிக்கைகளையும் அவ்வப்போது விமர்சனம் செய்வதும், ஜெயகுமார் தன்னுடைய பி.ஆர்.ஓ என்று கமல் பதிலடி கொடுப்பதும் வழக்கமாக உள்ளது.
இந்த நிலையில் இன்று பேட்டியளித்த்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், 'விவசாயிகளையும் அதிமுகவையும் பிரிக்க கமல்ஹாசனால் முடியாது' என்று கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள நடிகையும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகியுமான ஸ்ரீபிரியா, 'காமெடிக்கென்று ஒரு துறை உண்டென்றால் அதை அறிமுகம் செய்திருப்பது இந்த அரசே..அதுவும் அவர்கள் சொல்லும் காமெடிக்கு அவர்களே சிரித்துக்கொள்வது பயங்கர காமெடி' என்று தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்
வழக்கம்போல் நெட்டிசன்கள் ஸ்ரீபிரியாவின் இந்த கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். ஸ்ரீபிரியாவின் இந்த கருத்துக்கு அதிமுகவினர்களின் ரியாக்சன் என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
காமெடிக்கென்று ஒரு துறை உண்டென்றால் அதை அறிமுகம் செய்திருப்பது இந்த அரசே..அதுவும் அவர்கள் சொல்லும் காமெடிக்கு அவர்களே சிரித்துக்கொள்வது பயங்கர காமெடி...?? pic.twitter.com/gsy5mTA6WQ
— sripriya (@sripriya) June 22, 2018