அமைச்சர் ஜெயக்குமார் தான தெரியும்.. பாக்ஸர் ஜெயக்குமார் தெரியுமா..?! வீடியோல பாருங்க.
Send us your feedback to audioarticles@vaarta.com
அமைச்சர் ஜெயக்குமார் ஒயிட் அண்ட் ஒயிட் வேட்டி சட்டையில், கையில் கிளவுஸ் மாட்டிக் கொண்டு பாக்ஸிங் செய்து கலக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது.
பொதுவாக அமைச்சர் ஜெயக்குமார் வெகு இயல்பாக பழகக் கூடியவர். இவர் எதையாவது வித்தியாசமாக செய்து கொண்டே இருப்பார். கலைப்பிரியரும்கூட. திடீரென்று பாடுவார், திடீரென்று கவிதை எழுதுவார், தடாலடியான ஒரு சிங்ககுட்டியை மடியில் தூக்கி வைத்து கொஞ்சுவார். இப்படித்தான் சென்ற வருடம் சென்னையில், உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஆளில்லா விமானம் எனப்படும் டிரோன் டாக்சி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதில் ஆர்வமுடன் ஏறி உட்கார்ந்து கொண்ட ஜெயக்குமார், அதன் கதவையும் சாத்தி கொண்டு. அந்த விமானத்தையே சுற்றுமுற்றும் பார்த்தார். பிறகு அந்த விமானம் தயாரிக்கப்பட்ட விதத்தை அங்கிருந்தோரிடம் கேட்டறிந்தார். அப்போதுதான் அது நடிகர் அஜீத் தயாரித்தது என்று தெரியவந்தது. உடனே அமைச்சர், "அஜீத் என்ன இவ்வளவு திறமைசாலியா இருக்கிறாரே" என்று ஆச்சரியப்பட்டார்.
இதேபோல, சில மாதங்களுக்கு முன்பு சென்னை சாந்தோமில் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான நவீன ஜிம் ஒன்றினை ஜெயக்குமார் திறந்து வைத்தார். ரிப்பன் கட் பண்ணிட்டு உள்ளே நுழைந்தவர், ஜிம்மை சுற்றி ஒரு பார்வை பார்த்தார். பிறகு திடீரென அங்கிருந்த சைக்கிள் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு சைக்கிளிங் செய்ய ஆரம்பித்துவிட்டார். அப்போது அருகில் இருந்தவர்கள் ஜெயக்குமாரிடம் ஏதோ கேள்வி கேட்க, அதற்கு சைக்கிளிங் செய்து கொண்டே பதில் அளித்தார்.
அதுபோலதான், இப்போதும் ஒரு திறமையை வெளிப்படுத்தினார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குத்துச்சண்டை வீரர் ஒருவருடன் ஜெயக்குமார் பாக்சிங் செய்து அனைவரையும் அசத்தினார். தமிழ்நாடு குத்துச்சண்டை அசோசியேஷன் சார்பில் மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த அமைச்சர், கைகளில் கிளவ்ஸ்களை கட்டிக் கொண்டு பாக்சிங்கில் இறங்கிவிட்டார்.
வேட்டி, சட்டை & கையில் கிளவுஸ் என பார்க்கவே இந்த பாக்ஸிங் படுவித்தியாசமாக இருந்தது. சிரித்து கொண்டே பாக்ஸிங் செய்தது நம்ம அமைச்சராகத்தான் இருக்க முடியும். ஒரு இடத்தில் நிற்காமல், எதிரே போட்டிக்கு நின்ற குத்துச்சண்டை வீரரை சுற்றி சுற்றி வந்து பாக்ஸிங் செய்தார். அங்கிருந்தவர்கள் கரகோஷம் செய்து இதை உற்சாகப்படுத்தினர். இந்த வீடியோதான் இப்போது வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Sai Surya
Contact at support@indiaglitz.com
Comments