ஹரி-அருண்விஜய் படத்தில் இணைந்த 'ஆடுகளம்' நடிகர்!

  • IndiaGlitz, [Monday,February 01 2021]

பிரபல இயக்குனர் ஹரி மற்றும் நடிகர் அருண் விஜய் இணையும் படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் அருண்விஜய்யின் 33வது படமான இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக செய்தி வெளியானது என்பதும் தெரிந்ததே

மேலும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் பட்டியல் ஒவ்வொன்றாக வந்து கொண்டிருப்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக இந்த படத்தின் நாயகியாக ப்ரியா பவானிசங்கர் மற்றும் முக்கிய வேடங்களில் பிரகாஷ் ராஜ், யோகிபாபு, ராதிகா உள்ளிட்டோர் நடிக்கவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் ஜெயபாலன் அவர்கள் இணைந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இவர் ஏற்கனவே தனுஷின் ‘ஆடுகளம்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் குணசித்திர வேடத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

இன்னும் இந்த படத்தில் இணையும் நட்சத்திரங்களின் பட்டியல் யார் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்