ரூபாய் நோட்டுக்கு எதிரான போராட்டத்தில் சூப்பர் ஸ்டாரின் மனைவி

  • IndiaGlitz, [Wednesday,November 23 2016]

பிரதமர் மோடி அறிவித்த ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போரட்டம் நடத்தி வருகின்றனர். டெலியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒன்றுகூடி பிரதமர் மோடி அவைக்கு வந்து தங்களுடைய கேள்விக்கு பதிலளிக்க வேண்டும் என்று தற்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தின் எதிர்க்கட்சிகளின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த போராட்டத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனின் மனைவியும் சமாஜ்வாடி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான ஜெயாபச்சன் கலந்து கொண்டுள்ளார்.
பிரதமர் மோடி கடந்த 8ஆம் தேதி அறிவித்த அதிரடி அறிவிப்புக்கு அமிதாப்பச்சன் பாராட்டு தெரிவித்த நிலையில் இன்று எதிர்க்கட்சிகளின் போராட்டத்திற்கு அவருடைய மனைவி ஆதரவு கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சுசீந்திரனின் 'மாவீரன் கிட்டு' சென்சார் தகவல்கள்

'வெண்ணிலா கபடிக்குழு', பாண்டியநாடு', 'ஜீவா உள்பட வெற்றிபடங்களை இயக்கிய இயக்குனர் சுசீந்திரன்...

ரூபாய் நோட்டு நடவடிக்கை. பொதுமக்களிடம் பிரதமர் மோடி கேட்டுள்ள 10 கேள்விகள்

ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு 15 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இன்னும் புதிய ரூபாய் நோட்டுக்கள்...

உலகின் செல்வாக்குமிக்க 100 பெண்கள் பட்டியலில் சன்னிலியோன்

கனடாவை சேர்ந்த சன்னிலியோன் பாலிவுட் திரையுலகின் முன்னணி கவர்ச்சி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்...

செல்வராகவனின் 'நெஞ்சம் மறப்பதில்லை' டிராக் லிஸ்ட்

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை'...

ரூபாய் நோட்டு தடைக்கு பின் சக்திகாந்த் தாஸின் முக்கிய அறிவிப்புகள்

கடந்த 8ஆம் தேதி பாரத பிரதமர் நரேந்திரமோடி ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்புக்கு பின்னர் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காணும்...