விஜய்யுடன் நடிக்க வாய்ப்பு: நன்றி கூறிய நடிகர் ஜெய்

  • IndiaGlitz, [Saturday,November 04 2017]

தளபதி விஜய் நடித்த அதிரடி ஆக்சன் படமான 'பகவதி' எந்த அளவுக்கு ரசிகர்களின் வரவேற்பை பெற்றது என்பதை சொல்ல தேவையில்லை. இந்த படத்தில் விஜய்யின் தம்பியாக நடிகர் ஜெய் நடித்திருந்தார். இந்த கேரக்டர்தான் அவரை தமிழ் ரசிகர்களின் மனதில் நிறுத்தியது

இந்த நிலையில் இன்றுடன் 'பகவதி' திரைப்படம் வெளியாகி 15 வருடங்கள் முடிந்துள்ள நிலையில் நடிகர் ஜெய் தனது சமூக வலைத்தளத்தில் விஜய்க்கு நன்றி கூறியுள்ளார். தங்களுடைய படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு மிகவும் நன்றி, நீங்கள் இல்லாமல் நான் இந்த இடத்தில் இருந்திருக்க முடியாது' என்று கூறியுள்ளளார்

நடிகர் ஜெய்யின் இந்த டுவீட்டுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.