பெண்களுக்கு இந்த நாட்டில் சுதந்திரமில்லை.. 'ஜவான்' நடிகையின் ஆவேச பதிவு..!

  • IndiaGlitz, [Thursday,August 15 2024]

கொல்கத்தாவில் மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை குறிப்பிட்டுள்ள ‘ஜவான்’ பட நடிகை பெண்களுக்கு இந்த நாட்டில் சுதந்திரம் இல்லை என்று கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

‘ஜவான்’ படத்தில் ஷாருக்கானின் வளர்ப்பு தாய் கேரக்டரில் நடித்த நடிகை ரிதி தோக்ரா உளவியல் படித்துள்ளார். பாலிவுட் தொலைக்காட்சி தொடர்கள் இணைய தொடர்களில் நடித்து சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும் இவர் முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த சில நாட்களுக்கு முன் டாக்டருக்கு படித்து கொண்டிருந்த மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்த சம்பவம் சம்பவம் நாட்டையே அதிர வைத்துள்ளது. தற்போது இந்த வழக்கை சிபிஐ ஏற்று நடத்தி வருகிறது .

இந்த சம்பவம் குறித்து நடிகை ரிதி தோக்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’பாலியல் வன்கொடுமை என்பது தேசிய பிரச்சனையாகாத வரை பெண்களுக்கு இந்த நாட்டில் சுதந்திரம் இல்லை’ என பதிவு செய்துள்ளார். அவரது இந்த பதிவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஜாதி, மத, மொழி, இன வேறுபாடுகளை கடந்து பாடுபடுவோம்: தவெக விஜய் சுதந்திர தின பதிவு..!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தளபதி சமூக வலைதளத்தில் 78வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்து செய்துள்ள பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சீனு ராமசாமியின் 'கோழிப்பண்ணை செல்லத்துரை'.. ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

பிரபல இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில், யோகி பாபு நடிப்பில் உருவான 'கோழிப்பண்ணை செல்லத்துரை' என்ற திரைப்படம் கடந்த சில மாதங்களாக உருவாகி வந்த நிலையில்

ஆஸ்கர் கதவுளையும் தட்டட்டும்.. 'தங்கலான்' குழுவினருக்கு பிரபல தயாரிப்பாளர் வாழ்த்து..!

விக்ரம் நடிப்பில், பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான 'தங்கலான்' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் ஆஸ்கார் கதவை தட்டட்டும்

ராமாயணம், மகாபாரதம் மற்றும் இசையின் ஆன்மீக உறவு!-ஸ்ரீ துஷ்யந்த் ஸ்ரீதர்:

பிரபல ஆன்மீக உபன்யாசகர் ஸ்ரீ துஷ்யந்த் ஸ்ரீதர், ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில் அளித்த பேட்டியில், ராமாயணம், மகாபாரதம் மற்றும் இசை ஆகியவற்றின் ஆன்மீக உறவைப் பற்றி ஆழமாகப் பேசியுள்ளார்.

'இந்தியன் 2' படத்தை அடுத்து ஓடிடியில் இன்னொரு கமல் படம்.. தேதி அறிவிப்பு..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'இந்தியன் 2' திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில்  வெளியான நிலையில் தற்போது அவரது இன்னொரு திரைப்படமான 'கல்கி 2898ஏடி'  திரைப்படத்தின்