ஷாருக்கான் வீட்டின் சுவர்களை அலங்கரித்த 'ஜவான்' ஓவியங்கள்.. வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Wednesday,August 16 2023]

அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில் அனிருத் இசையில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'ஜவான்'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் செப்டம்பர் 7ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது.

இந்த படத்தில் புரமோஷன் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மும்பையில் உள்ள ஷாருக்கானின் 'மன்னத்' என்ற வீட்டில் உள்ள சுவர்களில் தற்போது 'ஜவான்' படத்தின் ஓவியங்கள் வரையும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது



இதை ரசிகர் ஒருவர் வீடியோ எடுத்து தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக ஷாருக்கான் வீடு அருகே வந்து இந்த ஓவியங்களை பார்த்து வருகின்றனர்.

இதுவரை இல்லாத அளவில் ஷாருக்கானின் விலை உயர்ந்த வீட்டின் சுவரில் ஜவான் படத்தின் ஓவியங்களாக அலங்கரித்துள்ளதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.

ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், ப்ரியாமணி, யோகிபாபு, அம்ரிதா ஐயர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் விஜய் மற்றும் சஞ்சய்தத் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக கூறப்பட்டாலும் இது எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.