அனிருத் குரலில் ஒரு மெலடி டூயட் பாடல்.. வெளியானது 'ஜவான்' சிங்கிள்..!

  • IndiaGlitz, [Monday,August 14 2023]

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ’ஜவான்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் நடிப்பில் உருவான படம் ’ஜவான்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ள நிலையில் ’ஹயோடா’ என்ற அந்த பாடல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த பாடலை அனிருத் கம்போஸ் செய்துள்ள நிலையில் இந்த பாடலை அனிருத் மற்றும் பிரியா மாலி பாடியுள்ளனர். விவேக் இந்த பாடலை எழுதியுள்ளார்.

இந்த பாடல் மெலடி பாடல் ஆக இருப்பதால் முதல்முறை கேட்கும் போது அசத்தலாக உள்ளது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த பாடல் நிச்சயம் படத்திலும் ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

விஜய்யை அடுத்து மாஸ் நடிகருடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா.. க்யூட் வீடியோ வைரல்..!

தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நாயகி ஆக நடித்திருந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு மாஸ் நடிகர் படத்தில் நடிக்க உள்ளதாக  அறிவிப்பு வெளியாகி உள்ளது

ராகவா லாரன்ஸ் சகோதரர் நடிக்கும் 'புல்லட்' படத்தில் 'ஜெயிலர்'' நடிகர்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

நடிகர், நடன இயக்குனர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் சகோதரர் எல்வின் நாயகனாக நடிக்கும் படம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த படத்திற்கு 'புல்லட்' என்ற டைட்டில் வைக்கப்பட்டது என்பதை ஏற்கனவே

தொடர் விடுமுறையை குறி வைத்த 'இறைவன்'.. ரூ.250 கோடி பட்ஜெட் படத்துடன் மோதுகிறதா?

ஜெயம் ரவி, நயன்தாரா நடித்த 'இறைவன்' திரைப்படம் ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த படத்தின் தொழில்நுட்ப  பணிகள் தாமதம் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி போக

கானாவில் கலக்கிய சிறுவன்.. திரைப்பட வாய்ப்பு தந்த தமன்!! சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஒரு ஆச்சரியம்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பதும்  தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி சீசன் 9 கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது

கீர்த்தி சுரேஷூக்கு கேக் ஊட்டிவிட்ட ராதிகா சரத்குமார்.. என்ன விசேஷம்..!

நடிகை ராதிகா திரையுலகில் நடிக்க வந்து 45 ஆண்டுகள் ஆனதை அடுத்து இதற்கான விழா சமீபத்தில் கொண்டாடப்பட்ட நிலையில் அந்த விழாவில் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியானதை அடுத்து நடிகர் ராதிகா, கீர்த்தி