close
Choose your channels

முதல் நாளில் உலக சாதனை செய்த 'ஜவான்' வசூல்.. திரையுலக வரலாற்றில் மிகப்பெரிய ஓப்பனிங்..!

Saturday, September 9, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஷாருக்கானின் 'ஜவான்' வெளியான முதல் நாளில் 129.6 கோடி ரூபாய் வசூலித்து உலக அளவில் சாதனை படைத்திருக்கிறது!

ஷாருக்கானின் 'ஜவான்', இந்தி திரையுலக வரலாற்றில் முதல் நாள் வசூலில் 129.6 கோடி ரூபாய் வசூலித்து மிகப்பெரிய தொடக்க நாள் வசூல் சாதனையை பதிவு செய்திருக்கிறது.

ஷாருக்கான் நடிப்பில் தயாராகி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்சன் என்டர்டெய்னர் திரைப்படமான ஜவான், உண்மையில் ஒரு திருவிழாவாக வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் வெளியீட்டை திரையரங்குகளுக்கு வெளியே பலத்த ஆரவாரம் மற்றும் நடனத்துடன் மைதானங்கள் போல் மாற்றி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த ஆக்சன் என்டர்டெய்னர் இதுவரை எந்த படத்துக்கும் இல்லாத வகையில் ஷாருக் கானின் மேஜிக் பார்வையாளர்களின் இதயங்களை வென்றிருக்கிறது. இதன் விளைவாக 'ஜவான்' வெளியான முதல் நாளில் 129.6 கோடி ரூபாய் வசூல் செய்து, புதிய சாதனை படைத்தது. இதன் மூலம் உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் ஷாருக்கான் மீண்டும் கால் பதித்துள்ளார்.

ஷாருக்கான் - ரசிகர்களின் மற்றும் பார்வையாளர்களின் இதயங்களை வென்று, பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைப்பார் என்பது ஜவான் படத்திற்கான முன்பதிவு மூலம் தெரிய வந்தது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் முதல் நாள் வசூல் அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும் என முன்பே கணிக்கப்பட்டது. எதிர்பார்த்ததை போலவே 'ஜவான்' அனைவரின் கணிப்புக்கும் அப்பாற்பட்டு 129.6 கோடி ரூபாய் வசூலித்து உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் அற்புதமான வெற்றியை பதிவு செய்துள்ளது. இதுவரை எந்த இந்திய படத்திற்கும் கிடைக்காத மிகப்பெரிய ஓப்பனிங் ...இந்த ஜவான் படத்திற்கு கிடைத்திருக்கிறது. மேலும் இந்தி திரையுலக வரலாற்றில் மிகப்பெரிய தொடக்க நாள் வசூல் சாதனையும் ஜவான் பதிவு செய்துள்ளது.

ஜவான் திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment