சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'தர்பார்' படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகர்!

  • IndiaGlitz, [Saturday,April 27 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருவது தெரிந்ததே. இந்த படத்தில் அவ்வப்போது பிரபலங்கள் இணைந்து ஆச்சரியத்தை அளித்து வரும் நிலையில் லேட்டஸ்ட் இணைப்பாக பாலிவுட் நடிகர் ஒருவர் இணைந்துள்ளார்.

'தர்பார்' படத்தில் பாலிவுட் நடிகரும் தொலைக்காட்சி பிரபலமுமான ஜாட்டின் சர்னா என்பவர் தற்போது இணைந்துள்ளார். இவர் இந்த படத்தின் வில்லன்களில் ஒருவராக நடித்து வருவதாக கூறப்படுகிறது சமீபத்தில் இவர் ரஜினியுடன் இணைந்து எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ், பிரதிக் பாபர், யோகிபாபு, ஹரிஷ் உத்தமன், மனோபாலா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு இளம் இசைப்புயல் அனிருத் இசையமைத்து வருகிறார். லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர். இந்த படம் வரும் 2020ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.