6 பந்தில் 6 பவுலர்களை நகல் எடுக்கும் பும்ரா!!! அசத்தல் வீடியோ!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடருக்கான இறுதிகட்ட பயிற்சியில் இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா 6 பந்துகளில் 6 பவுலர்களைப் போல வீசி அசத்தும் காட்சி தற்போது வைரலாகி வருகிறது.
கொரோனா தாக்கம் காரணமாக 8 ஆவது ஐபிஎல் மேட்சை இந்தியாவில் நடத்த முடியவில்லை. இதனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் துபாயில் ஐபிஎல் தொடர் நடைபெறும் என இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இதற்காக இந்திய கிரிக்கெட் அணியினர் அபுதாபில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு நல்ல உடல்நிலையுடன் இருக்கும் பட்சத்தில் விளையாட அனுமதிக்கப் படுவார்கள் எனக் கூறப்பட்டு இருந்தது. ஐபிஎல் தொடருக்கான முதல்போட்டி வருகிற செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதற்கான இறுதிக்கட்ட பயிற்சியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதவுள்ள நிலையில் வலைப் பயிற்சியில் ஈடுபட்ட பும்ரா ஒரு அசத்தலான காரியத்தை செய்து காட்டியிருக்கிறார். வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா எதிரணியினரை நிலைகுலைய வைக்கும் அளவிற்கு திறமையாகப் பந்து வீசும் இயல்பு உடையவர். இந்நிலையில் சக வீரர்களுடன் வலை பயிற்சியில் ஈடுபட்ட பும்ரா ஒவ்வொரு பந்தையும் ஒவ்வொரு வீரர்களைப்போல வீசும் வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
முதலில் இலங்கை வீரர் லசித் மலிங்கா அடுத்து முனாஃப் படேல், மிட்செல் ஸ்டார்க், கேதார் ஜாதவ், அமித் மிஸ்ரா, அனில் கும்ளே போல அடுத்தடுத்து 6 பந்துகளிலும் 6 வீரர்களைப் பால அசலாட்டாக வீசுகிறார். 7 ஆவது பந்தில் தன்னுடைய ஒரிஜினலை வெளிப்படுத்துகிறார் பும்ரா. அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
?? Can you guess all 6️⃣ bowlers Boom is trying to imitate? ??
— Mumbai Indians (@mipaltan) September 7, 2020
PS: Wait for the bonus round ?? #OneFamily #MumbaiIndians #MI #Dream11IPL @Jaspritbumrah93 pic.twitter.com/RMBlzeI6Rw
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com