சத்தமில்லாமல் பும்ரா செய்த சாதனை!
Send us your feedback to audioarticles@vaarta.com
இங்கிலாந்துக்கு எதிரான 4 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றுள்ளது. இதனால் டெஸ்ட் தொடரில் 2-1 என்ற முன்னிலையை பெற்று வெற்றி வாய்ப்புக்கான அடித்தளத்தை அமைத்து இருக்கிறது. ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி கடந்த 50 ஆண்டுகளுக்குப் பிறகு 2 ஆவது முறையாக வெற்றிப்பெற்று இருபபது இந்திய ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வெற்றிக்கு இடையே இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் அசுர வேகத்தில் 100ஆவது விக்கெட்டை எடுத்துள்ளார். இந்த விக்கெட்டை அவர் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது இன்னிங்ஸில் ஆலி போப்பை வீழ்த்தியதன் மூலம் பெற்றுள்ளார். முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டை வீழ்த்திய அவர் அடுத்த இன்னிங்ஸில் தனது 100 ஆவது விக்கெட்டை வீழ்த்தியதோடு 101 ஆவது விக்கெட்டையும் எடுத்துள்ளார். இதனால் அதிக வேகத்தில் 100 ஆவது விக்கெட்டை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்.
கடந்த 2018 முதல் டெஸ்ட் கிரிக்கெட்டுக்காக விளையாடி வரும் பும்ரா இதுவரை 24 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்திய முன்னாள் வீரர்களான கபில்தேவ் (25), இர்பான் பதான் (28), முகமது ஷமி (29), ஸ்ரீநாத் (30), இஷாந்த் சர்மா (33) டெஸ்ட் போட்டிகளில் தங்களது 100 ஆவது விக்கெட்டை வீழ்த்தி இருந்தனர். இதில் பும்ரா வெறும் 24 டெஸ்ட் போட்டிகளில் 100 ஆவது விக்கெட்டை வீழ்த்தி இருப்பது அவர் மீது இன்னும் அதிக நம்பிக்கையை ரசிகர்களிடையே ஏற்படுத்தி இருக்கிறது.
அதோடு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு இடையே பும்ரா கூறியதாக கேப்டன் கோலி சொன்ன விஷயமும் தற்போது ரசிகர்களிடையே பெரும் மலைப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது மைதானத்தில் பந்து ஸ்விங் ஆக தொடங்கியதும் பும்ரா கோலியிடம் சென்று “பந்தை என்னிடம் கொடுங்கள். இனி நான் பார்த்துக் கொள்கிறேன்” என பந்து வீசும் வாய்ப்பை கேட்டு வாங்கினாராம். அப்படி அவர் வீழ்த்திய 2 விக்கெட் இந்திய அணியின் வெற்றிக்கு பெரும் பங்காற்றி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout