சூரியிடம் கதை சொன்ன ஜேசன் சஞ்சய்.. கதை கேட்டவுடன் சூரி பதில் என்ன தெரியுமா?

  • IndiaGlitz, [Friday,August 09 2024]

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தனது முதல் படத்தின் கதையை சூரியிடம் சொன்னதாகவும் அந்த கதையை கேட்டு சூரி சொன்ன பதில் அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்ததாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் திரைப்படத்தை இயக்க இருக்கும் நிலையில் இந்த படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.

இந்த படத்தின் ஹீரோ கேரக்டரில் நடிக்க விஜய் சேதுபதி, கவின் உள்பட ஒரு சில நடிகர்களை ஜேசன் சஞ்சய் அணுகி கதை சொன்னதாகவும், ஆனால் இன்னும் ஹீரோ முடிவு செய்யப்படவில்லை என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக பதவி உயர்வு பெற்றுள்ள சூரியிடம் ஜேசன் சஞ்சய் இந்த படத்தின் கதையை சொன்னதாகவும், கதையை பொறுமையாக ஒரு மணி நேரத்துக்கு மேல் கேட்ட சூரி, ‘இந்த கதை மாஸ் நடிகர்களுக்கான கதை, என்னை போன்ற நடிகர்களுக்கு இது செட் ஆகாது என்று அவர் நடிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தில் நடிக்கும் நாயகன் யார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.