ஜேசன் சஞ்சய் படத்தின் இசையமைப்பாளர் இவரா? படப்பிடிப்பு எப்போது?

  • IndiaGlitz, [Thursday,July 18 2024]

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் ஒரு படத்தை இயக்க இருக்கிறார் என்றும் அந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த படத்தில் நாயகனாக நடிக்க கவின் உள்பட ஒரு சில நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்த நிலையில் ஹீரோ இன்னும் முடிவாகவில்லை என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி இந்த படத்தின் திரைக்கதை அமைக்கும் பணி முழுவதுமாக முடிந்து விட்டதாகவும் அடுத்த கட்ட பணிகளை தொடங்க ஜேசன் சஞ்சய் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா மற்றும் சுஷின் ஷ்யாம் ஆகிய இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் இந்த இருவரில் ஒருவர் தான் இசையமைப்பாளராக பணிபுரிவார் என்றும் அனேகமாக யுவன் சங்கர் ராஜா பணிபுரிய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம் ஏற்கனவே பல மலையாள திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் என்ற நிலையில் ஜேசன் சஞ்சய் படம் மூலம் தமிழில் அறிமுகமாவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

More News

சிம்ம ராசிக்கு ராசி பலன் ஆடி முதல் பங்குனி வரை -பிரபல வேத ஜோதிடர் பிரகாஷ் நரசிம்ஹன்

பிரபல ஜோதிடர் திரு. பிரகாஷ் நரசிம்ஹன் அவர்கள் யூடியூப் சேனல் ஆன்மீக கிளிக்ஸ்க்கு அளித்த பேட்டி ஒன்றில், வரும் ஆறு மாதங்களுக்கான (ஆடி முதல் பங்குனி வரை) சிம்ம ராசி ஜாதகத்தை பற்றி விரிவாக கணித்துள்ளார்.

ஒரே படத்தில் 8 பணிகள்.. எல்லாமே ஹிப் ஹாப் ஆதி தான்.. அதிரடி அறிவிப்பு..!

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி ஒரே படத்தில் 8 பொறுப்புகளை நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சூப்பர் அப்டேட் கொடுத்த சூர்யாவின் 'கங்குவா' படக்குழு.. ஒரே ஃபயர் தான் போல..!

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'கங்குவா' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து கடந்த சில வாரங்களாக தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது

2 படங்கள் முடித்தும் வெளியாகாமல் இருக்கும் சோகம்.. ஷங்கர் உதவியாளருக்கே இந்த நிலையா?

ஷங்கரிடம் உதவியாளராக இருந்த அட்லி தற்போது இந்திய அளவில் பிரபலமாகிவிட்ட நிலையில் அவரிடம் உதவியாளராக இருந்த இன்னொரு இயக்குனர் இரண்டு படங்களை இயக்கி

'ஆடுஜீவிதம்' உட்பட இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன படங்கள்.. முழு விவரங்கள்..!

ஒவ்வொரு வாரமும் ஓடிடியில் ஏற்கனவே திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்த நிலையில் இந்த வாரம் பிரித்விராஜ்  சுகுமாரன், அமலாபால்