முதல் படத்திலேயே இவ்வளவு பிரமாண்டமா? ஜேசன் சஞ்சய் வேற லெவல் திட்டம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பதும், இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் ஜேசன் சஞ்சய் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகளில் பிஸியாக இருக்கும் நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி, இந்த படம் 10 மொழிகளில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ் திரை உலக பொறுத்தவரை முதல் முறையாக சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ திரைப்படம் தான் 10 மொழிகளில் உருவாகி வருகிறது என்ற நிலையில் அடுத்ததாக ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படமே 10 மொழிகளில் உருவாக இருப்பதாக கூறப்படுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த படத்தின் நாயகனாக கவின் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் நாயகி தேர்வும் முடிந்து விட்டதாகவும் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உட்பட 10 மொழிகளில் ஜேசன் சஞ்சய் இந்த படத்தை இயக்க இருக்கும் ஐடியாவை கூறியவுடன் லைகா நிறுவனம் ஒப்புக் கொண்டதாகவும் இந்த படத்திற்காக பெரிய பட்ஜெட்டை செலவழிக்க திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் மினி டீசர் மூலம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout