ஜேசன் சஞ்சய் முதல் படத்தின் இசையமைப்பாளர் இந்த பிரபலமா? பேச்சுவார்த்தை மும்முரம்..!

  • IndiaGlitz, [Tuesday,September 26 2023]

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் நாயகனாக கவின் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது இந்த படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் கசிந்து உள்ளது.

ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே கவின் நடிப்பில் உருவாகி வரும் ’ஸ்டார்’ திரைப்படத்திற்கும் யுவன் சங்கர் ராஜா தான் இசையமைக்க உள்ள நிலையில் கவின் ஜேசன் சஞ்சய் படத்திற்கும் அவர் இசையமைப்பாளர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் நடிக்கும் நாயகி உட்பட நட்சத்திரங்கள் தேர்வு மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் தயாரிப்பு தரப்பில் இருந்து விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

More News

17 லட்சத்தை தூக்கி எறிந்த ரோகிணி .. வளையலால் மீண்டும் சிக்கிய விஜயா.. விறுவிறுப்பில் 'சிறகடிக்க ஆசை'

வீட்டு பத்திரத்தை வைத்து 17 லட்சம் ரூபாய் வட்டிக்கு வாங்கிய பணத்தை, குடும்பத்தினர் முன்னிலையில் ரோகிணி தூக்கி எறிய அப்போது அந்த பணத்தை பைனான்சியரிடம் கொடுக்கச் சென்றபோது

ஷாருக்கானுடன்  மோதும் பான் - இந்திய நடிகரின் படம்.. 3வது ரூ.1000 கோடிக்கு சிக்கலா?

ஷாருக்கான் நடித்த 'பதான்' மற்றும் 'ஜவான்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் இந்த ஆண்டு 1000 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்துள்ளது. இந்த நிலையில் ஷாருக்கான்

உயிர் மற்றும் உலகு உடன் ரொமான்ஸ்.. விக்கி-நயன் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் உயிர் மற்றும் உலகு ஆகிய இரட்டை குழந்தைகளுடன் ரொமான்ஸ் செய்யும் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்

லைகாவுக்கு சென்றது தனுஷின் அடுத்த படம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

தனுஷ் நடித்து முடித்துள்ள திரைப்படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை லைகா நிறுவனம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்.28ல் படம் ரிலீஸ்.. ரஜினியின் காலில் விழுந்து ஆசி பெற்ற பிரபலம்..!

ராகவா லாரன்ஸ் நடித்த 'சந்திரமுகி 2' திரைப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் சற்று முன் அவர் ரஜினியின் காலில் விழுந்து ஆசி பெற்ற புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.