ஜேசன் சஞ்சய் - லைகா படத்தின் படப்பிடிப்பு எப்போது? சூப்பர் அப்டேட்..!

  • IndiaGlitz, [Wednesday,January 10 2024]

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறார் என்பதும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இது குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது என்பதை பார்த்தோம்.

இந்நிலையில் ஜேசன் சஞ்சய் இயக்கும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டாலும் கவின் உட்பட மேலும் சிலரிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் அறிவிப்பு வெளிவந்து சில மாதங்கள் ஆன பின்னரும் எந்தவித அப்டேட்டும் இல்லாமல் இருக்கும் நிலையில் தற்போது வந்துள்ள தகவல்படி இந்த படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்று பொங்கல் தினத்தில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

லைகா மற்றும் ஜேசன் சஞ்சய் இணையும் திரைப்படத்தில் நடிக்கும் ஹீரோ உள்பட நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் அறிவிப்பு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்றும் அதனை அடுத்து ஒரு சில வாரங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் திரைப்படம் குறித்த அறிவிப்பை சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

More News

பிக்பாஸ் பூர்ணிமாவின் நேரடி திரைப்படம் உள்பட இந்த வார ஓடிடி ரிலீஸ் தகவல்கள்..!

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் பொங்கல் ஸ்பெஷல் என்பதால் 'அயலான்', 'கேப்டன் மில்லர்' 'மிஷன் சாப்டர் ஒன்' மற்றும் 'மெர்ரி கிறிஸ்துமஸ்'

சூர்யாவின் அடுத்த படத்தில் நடிக்க வேண்டுமா? இதோ ஒர் அற்புத வாய்ப்பு.. வைரல் விளம்பரம்..!

சூர்யாவின் அடுத்த படத்தில் நடிப்பதற்கான புது முகங்கள் தேர்வு செய்யப்பட இருப்பதாக விளம்பரம் ஒன்று வெளியாகியிருப்பதை அடுத்து சூர்யாவுடன் நடிக்க விரும்புபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு

பிக்பாஸ் அபிஷேக் இயக்கத்தில் பிரபல நடிகர்.. மாஸ் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான அபிஷேக் ராஜா இயக்கத்தில் பிரபல நடிகர் நடித்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் அந்த போஸ்டர் வைரல் ஆகி வருகிறது.

பிக்பாஸ் டைட்டிலை மிஸ் செய்த விக்ரமனுக்கு இப்படி ஒரு நிலையா? ஜொலிக்காத மற்ற போட்டியாளர்கள்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் பிரபலமாகலாம் என்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றால் மிகப்பெரிய அளவில் திரையுலகில் வாய்ப்பு கிடைக்கும் என்றுதான் கூறப்பட்டது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'லால்சலாம்' ரிலீஸ் தேதி.. மாஸ் ஆக வருகிறார் மொய்தீன்பாய்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'லால்சலாம்' திரைப்படம் பொங்கல் திருநாளில் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதன்பின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டதாக செய்திகள் வெளியானது.