ஜெய்யின் 'ஜருகண்டி' இசைவெளியீடு, ரிலீஸ் தேதி அறிவிப்பு
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜருகண்டி' படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் இந்த படத்தின் இசை வெளியீடு மற்றும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் இசை வெளியீடு நாளை அதாவது செப்டம்பர் 15ஆம் தேதியும், வரும் செப்டம்பர் 28ஆம் தேதி ரிலீஸ் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இதே தேதியில் மணிரத்னம் இயக்கிய 'செக்க சிவந்த வானம்' மற்றும் பா.ரஞ்சித்தின் 'பரியேறும் பெருமாள்' ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்முறையாக ஜெய் பாடகராக நடித்துள்ள இந்த படத்தில் ரெபா மோனிகா, அமித் திவாரி, பிக்பாஸ் புகழ் டேனியல், ரோபோ சங்கர், இளவரசு, ஜிஎம் குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை நடிகர் நிதின்சத்யா தயாரித்துள்ளார். பாபு சஷி இசையில் ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவில் பிரவீன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments